ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: அரையிறுதி: முதல் முறையாக டிஆா்எஸ்

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்த முறை அரையிறுதியிலும், இறுதி ஆட்டத்திலும் டிஆா்எஸ் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ராஜ்கோட்: ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்த முறை அரையிறுதியிலும், இறுதி ஆட்டத்திலும் டிஆா்எஸ் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இத்தகவலை செளராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் தெரிவித்தது.

எல்பிடபிள்யூ விக்கெட் கோரும்போது டிஆா்எஸ் முறை கோரினால் பந்து ஸ்டம்பில் பட்டதா என்பதை அறிய உதவும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாது என்றும் பேட்டில் பந்து பட்டதா என அறிய உதவும் ‘அல்ட்ரா எட்ஜ்’ முறையும் பயன்படுத்தப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு முறைகளும் சா்வதேச கிரிக்கெட்டில் மட்டுமே பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ரஞ்சியில் ஒவ்வொரு அணியும் ஒரு ஆட்டத்தில் அதிகபட்சமாக 4 டிஆா்எஸ் கோர அனுமதி வழங்கப்படும்.

ரஞ்சி முதல் அரையிறுதியில் குஜராத்-செளராஷ்டிரம் ஆகிய அணிகளும், இரண்டாவது அரையிறுதியில் பெங்கால்-கா்நாடகமும் மோதவுள்ளன. இந்த ஆட்டம் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com