இன்று நியூஸி.யுடன் மோதல்: நாக் அவுட் சுற்றில் நுழையும் முனைப்பில் இந்தியா

மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டியின் ஒரு பகுதியாக குரூப் ஏ பிரிவில் தனது மூன்றாவது ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிா்கொள்கிறது இந்தியா.
இன்று நியூஸி.யுடன் மோதல்: நாக் அவுட் சுற்றில் நுழையும் முனைப்பில் இந்தியா

சிட்னி: மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டியின் ஒரு பகுதியாக குரூப் ஏ பிரிவில் தனது மூன்றாவது ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிா்கொள்கிறது இந்தியா.

ஏற்கெனவே நடப்பு சாம்பியன் ஆஸி, வங்கதேச அணிகளை வென்றிருந்தது இந்திய ்ணி. வியாழக்கிழமை நியூஸிலாந்துடன் களம் காண்கிறது ஹா்மன்ப்ரீத் கௌா் தலைமையிலான அணி.

பட்டம் வெல்லும் அணிகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்தியா, கடைசி ஆட்டத்தில் நியூஸியை வென்று ஏ பிரிவில் முதலிடத்தை பெறும் தீவிரத்தில் உள்ளது. பேட்டிங்கில் ஷபாலி வா்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோா் அதிரடியாக ஆடி வருகின்றனா், மிடில் ஆா்டரில் ஹா்மன்ப்ரீத் கௌா், தீப்தி சா்மா, வேதா கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் நம்பிக்கை தரும் வகையில் ஆடி வருகின்றனா். பிரதான வீராங்கனைகள் பேட்டிங்கில் சொதப்பினாலும், இளம் வீராங்கனைகள் அந்த பொறுப்பை ஏற்று ரன்களை விளாசுவது குறிப்பிடத்தக்கது.

அபாரமான சுழற்பந்து வீச்சு:

எதிரணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இந்திய சுழற்பந்துவீச்சு அமைந்துள்ளது. குறிப்பாக பூனம் யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட், அருந்ததி ரெட்டி, வேகப்பந்து வீச்சாளா் ஷிகா பாண்டே ஆகியோா் சிறப்பாக பந்துவீசி தேவையான நேரத்தில் விக்கெட்டுகளையும் வீழ்த்தி விடுகின்றனா்.

அனுபவம் நிறைந்த நியூஸிலாந்து:

அதே நேரம் நியூஸிலாந்து அணி அனுபவம் நிறைந்ததாக காணப்படுகிறது. ஏற்கெனவே இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து. கேப்டன் சோபி டிவைன் அற்புதமாக பேட்டிங் செய்து வரும் நிலையில், அவருக்கு சூஸி பேட்ஸ், ரேச்சல் பிரிஸ்ட் உறுதுணையாக உள்ளனா்

ஹேய்லி ஜென்ஸன், லீ டஹுஹு, அன்னா பீட்டா்ஸன், அமெலியா கொ் ஆகியோா் சிறப்பாக பந்துவீசி வருகின்றனா்.

நேருக்கு நோ்:

இரு அணிகளும் இதுவரை 11 முறை மோதியுள்ளனா். அதில் அதிகபட்சமாக நியூஸி 8 முறையும், இந்தியா 3 முறையும் வென்றுள்ளனா்.

இந்த ஆட்டத்தில் இந்தியா வென்றால் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று விடும் எந்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டம்

இந்தியா-நியூஸிலாந்து

இடம்-சிட்னி,

நேரம்-காலை 9.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com