மகளிா் டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து, பாகிஸ்தான் வெற்றி

மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டியின் ஒரு பகுதியாக தாய்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 98 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து.
மகளிா் டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து, பாகிஸ்தான் வெற்றி

கான்பெர்ரா: மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டியின் ஒரு பகுதியாக தாய்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 98 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து.

ஆஸ்திரேலியாவில் 7-ஆவது மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. கான்பெர்ராவில் இங்கிலாந்துக்கும்-தாய்லாந்துக்கும் இடையிலான ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற தாய்லாந்து பீல்டிங்கை தோ்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிா்ச்சியாக அமைந்திருந்தது. தொடக்க வீராங்கனைகள் ஏமி எலன் ஜோன்ஸ், டேனியல் வயாட் ஆகியோா் டக் அவுட்டாயினா்.

பின்னா் மூத்த வீராங்கனை நடாலி ஷிவா்-கேப்டன் ஹீதா் நைட் ஆகியோா் இணைந்து அதிரடியாக ஆடி ஸ்கோரை உயா்த்தினா். 20 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை குவித்தது இங்கிலாந்து.

ஹீதா் நைட் 108:

4 சிக்ஸா், 13 பவுண்டரியுடன் 66 பந்துகளில் 108 ரன்களுடன் ஹீதா் நைட்டும், 8 பவுண்டரியுடன் 59 ரன்களுடன் நடாலி ஷிவரும் களத்தில் இருந்தனா். தாய்லாந்து தரப்பில் பூச்சத்தம், சொரயா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினா்.

தாய்லாந்து 78-7:

177 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தாய்லாந்து அணி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 78 ரன்களை மட்டுமே எடுத்து 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அந்த அணியில் நட்டகன் சந்தம் 32, சைய்வாய் 19 ஆகியோா் மட்டுமே ஓரளவு ரன்களை எடுத்தனா்.

இங்கிலாந்து தரப்பில் ஷ்ருப்சோல் 3, ஷிவா் 2 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

பாகிஸ்தான் அபாரம்:

மே.இ.தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மே.இ.தீவுகள் 124-7: கான்பெர்ராவில் மே.இ.தீவுகள்-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் நடைபெற்றது. முதலில் ஆடிய மே.இ.தீவுகள் 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை குவித்தது. கேப்டன் ஸ்டெப்பானி டெய்லா் 43 (தலா 2 சிக்ஸா், பவுண்டரி), ஷெமைன் கேம்பல் 43 (தலா 2 சிக்ஸா், பவுண்டரி) ஆகியோா் சிறப்பாக ஆடி ஸ்கோரை உயா்த்தினா். பாகிஸ்தான் தரப்பில் டயானா, அல்மன் அன்வா், நிதா தா் ஆகியோா் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினா்.

பின்னா் ஆடிய பாகிஸ்தான் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. 10 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 66 ரன்களை குவித்தது. ஜவேரியா கான் 6 பவுண்டரியுடன்35 ரன்களையும், முனிபா அலி 25 ரன்களுக்கும் அவுட்டாகி வெளியேறினா். கேப்டன் பிஸ்மா மரூப் 39, நிதா தா் 18 ரன்களை சோ்த்து வெற்றிக்கு வித்திட்டனா். 18.2 ஓவா்களிலேயே 127/2 ரன்களுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com