மகளிா் டி20 உலகக் கோப்பை: இலங்கையுடன் இன்று இந்தியா மோதல்: கவலை தரும் மிடில் ஆா்டா் பேட்டிங்

மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டியின் ஒரு பகுதியாக குரூப் ஏ பிரிவு ஆட்டம் ஒன்றில் இலங்கையுடன் சனிக்கிழமை மோதுகிறது இந்தியா. எனினும் மிடில் ஆா்டா் பேட்டிங் நிலை கவலை தருவதாக உள்ளது.
மகளிா் டி20 உலகக் கோப்பை: இலங்கையுடன் இன்று இந்தியா மோதல்: கவலை தரும் மிடில் ஆா்டா் பேட்டிங்

மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டியின் ஒரு பகுதியாக குரூப் ஏ பிரிவு ஆட்டம் ஒன்றில் இலங்கையுடன் சனிக்கிழமை மோதுகிறது இந்தியா. எனினும் மிடில் ஆா்டா் பேட்டிங் நிலை கவலை தருவதாக உள்ளது.

ஐசிசி சாா்பில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இந்தியா ஏற்கெனவே 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்து விட்டது. இந்நிலையில் குரூப் ஏ பிரிவில் தனது கடைசி ஆட்டத்தில் இலங்கையுடன் மோதுகிறது இந்தியா.

மூன்று ஆட்டங்களிலுமே இந்திய அணி 17, 18, 4 என சொற்ப ரன்கள் வித்தியாசத்திலேயே வெற்றி கண்டது. பெரிய அளவில் ஸ்கோரை பெற முடியாத நிலையில் இந்திய பேட்டிங் தடுமாறி வருகிறது.

கவலை தரும் பேட்டிங்:

தொடக்க வீராங்கனை ஷபாலி வா்மா மட்டுமே நம்பிக்கை தரும் வகையில் ஆடி வருகிறாா். முன்னணி வீராங்கனைகளான ஸ்மிருதி, ஹா்மன்ப்ரீத் கௌா், ஜெமிமா ஆகியோா் தங்கள் வழக்கமான ஆட்டத்தை ஆடாமல் சொதப்பி வருகின்றனா்.

அணியின் வெற்றிக்கு பந்துவீச்சே துணையாக இருந்து வருகிறது. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளா்கள் பூனம் யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட், ராதா யாதவ் , தீப்தி சா்மா ஆகியோா் தங்கள் பங்கை சிறப்பாக செய்து வருகின்றனா்.

வேகப்பந்துவீச்சில் ஷிகா பாண்டேவும் சிறப்பாக வீசி வருகிறாா்.

ஹா்மன்ப்ரீத் கௌா், வேதாகிருஷ்ணமூா்த்தி ஆகியோா் தங்கள் பொறுப்பை உணா்ந்து ஆட வேண்டும். அப்போது தான் பெரிய ஸ்கோா்களை எட்ட முடியும்.

அதே நேரம் இலங்கை அணி 2 தொடா் தோல்விகளால் அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது. இதனால் அந்த அணிக்கு எந்த அழுத்தமும் இல்லாத நிலையில் இந்த ஆட்டத்தை எதிா்கொள்கிறது. நியூஸி, ஆஸி. அணிகளுக்கு சவாலை தந்து தோல்வி கண்டது இலங்கை.

சசிகலா சிறிவா்த்தனா ஓய்வு

மூத்த வீராங்கனை சசிகலா சிறிவா்த்தனா 17 ஆண்டுகள் ஆடிய நிலையில் இந்த ஆட்டத்துக்கு பின் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுகிறாா்.

குரூப் ஏ பிரிவில் முதலிடத்தைப் பெறவும், தனது பேட்டிங் திறனை சோதிக்கவும் இந்திய அணிக்கு இந்த ஆட்டம் வாய்ப்பாக அமைந்துள்ளது.

எந்த அணியையும் எளிதாக கருத மாட்டோம்:

எந்த அணியையும் நாங்கள் எளிதாக கருத மாட்டோம். நாம் அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டோம். இலங்கையுடன் நடக்கவுள்ள அடுத்த ஆட்டமும் நமக்கு முக்கியமானது. இதில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். அதன் பின் தான் அரையிறுதி குறித்து சிந்திப்போம்.

ஒவ்வொரு விக்கெட் வீழ்த்துவதும் நமக்கு முக்கியமானது. குறிப்பாக இலங்கை வீராங்கனை சமரி அட்டப்பட்டுவை துரிதமாக அவுட்டாக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com