தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஆண்டர்சன் விலகல்!

இன்னும் 16 விக்கெட்டுகள் எடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை எடுத்த நான்காவது வீரர் என்கிற பெருமையைப் பெறுவார்...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஆண்டர்சன் விலகல்!

எந்தவொரு வேகப்பந்துவீச்சாளரும் இதுவரை 150 டெஸ்டுகளில் விளையாடியதில்லை. இந்தச் சாதனையை நிகழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளர், ஆண்டர்சன். தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தச் சாதனையை நிகழ்த்தினார். செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் தனது 150-வது டெஸ்டை விளையாடினார். 

இந்நிலையில் 2-வது டெஸ்டின் கடைசி நாளன்று ஆண்டர்சனுக்குக் காயம் ஏற்பட்டதால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டில் விளையாடிய ஆண்டர்சன், நான்கு ஓவர்கள் மட்டுமே பந்துவீசினார். கெண்டைக்காலில் வலி ஏற்பட்டதால் ஆட்டத்திலிருந்து விலகினார். அதன்பிறகு நடைபெற்ற ஆஷஸ் ஆட்டங்களில் அவரால் இடம்பெறமுடியாமல் போனது. இந்நிலையில் காயம் காரணமாக மீண்டும் ஒரு டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். 

இன்னும் 16 விக்கெட்டுகள் எடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை எடுத்த நான்காவது வீரர் என்கிற பெருமையைப் பெறுவார் ஆண்டர்சன். இவரை விடவும் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள முரளிதரன், வார்னே, கும்ப்ளே ஆகிய மூவரும் சுழற்பந்துவீச்சாளர்கள்தாம். எனவே 600 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த முதல் வேகப்பந்துவீச்சாளர் என்கிற பெருமையை விரைவில் அடையவுள்ளார் ஆண்டர்சன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com