Enable Javscript for better performance
ஆக்லாந்து கிளாஸிக்: 3 ஆண்டுகளுக்கு பின் செரீனா சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    

    ஆக்லாந்து கிளாஸிக்: 3 ஆண்டுகளுக்கு பின் செரீனா சாம்பியன்

    By DIN  |   Published on : 13th January 2020 12:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tennis

    ஆக்லாந்து மகளிர் கிளாஸிக் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
    ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கு தயாராகும் வகையில் ஆக்லாந்து, பிரிஸ்பேனில் மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
    ஆக்லாந்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் சக வீராங்கனை பெகுலாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். கடந்த 2017-ஆம் ஆண்டுக்கு பின் குழந்தை ஒலிம்பியா பிறந்த பின்னால் 3 ஆண்டுகள் கழித்து அவர் வெல்லும் முதல் பட்டம் இதுவாகும்.
    அடுத்து நடக்கவுள்ள ஆஸி. ஓபன் போட்டியில் பட்டம் வென்று 24-ஆவது கிராண்ட்ஸ்லாம் சாதனையை சமன் செய்வாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    பரிசுத் தொகை ரூ.30 லட்சம் நன்கொடை: ஆக்லாந்து போட்டியில் பட்டம் வென்றதின் மூலம் கிடைத்த பரிசுத் தொகை ரூ.30 லட்சத்தை காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக வழங்க செரீனா அளித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரிஸ்பேன்-பிளிஸ்கோவா சாம்பியன்: பிரிஸ்பேனில் நடைபெற்ற சர்வதேச மகளிர் போட்டி இறுதி ஆட்டத்தில் நட்சத்திர வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 6-4, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மடிஸன் கீய்ஸை போராடி வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.  

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai