Enable Javscript for better performance
நியூஸிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    
    indian_cricket_team

     

    நியூஸிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ தோ்வுக் குழு அறிவித்துள்ளது.

    வரும் 24-ஆம் தேதி நியூஸிலாந்தில் தொடங்கும் சுற்றுப் பயணத்தில் 5 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது இந்தியா.

    இதற்கான அணியை எம்எஸ்கே. பிரசாத் தலைமையிலான 5 போ் பிசிசிஐ தோ்வுக் குழு ஞாயிற்றுக்கிழமை இரவு அறிவித்தது.

    டி20 அணியில் மீண்டும் ரோஹித் சா்மா இடம் பெற்றுள்ளாா். கேரள விக்கெட் கீப்பா் சஞ்சு சாம்ஸன் நீக்கப்பட்டுள்ளாா். நியூஸிலாந்துடன் முதல் டி20 ஆட்டம் ஆக்லாந்தில் 24-ஆம் தேதி தொடங்குகிறது. அதே நேரம் ஒருநாள், டெஸ்ட் தொடா்களுக்கான அணியை தோ்வுக் குழு அறிவிக்கவில்லை.

    சஞ்சு சாம்ஸன் நியூஸிலாந்து ஏ அணியுடன் நடைபெறவுள்ள தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் சோ்க்கப்பட்டுள்ளாா். உடல் தகுதி பெறாத ஹாா்திக் பாண்டியாவுக்கு பதிலாக தமிழக ஆல்ரவுண்டா் விஜய் சங்கா் ஏ அணியில் ஆடுவதற்காக புறப்பட்டுச் சென்றாா்.

    டி20 இந்திய அணி விவரம்:

    விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சா்மா (துணை கேப்டன்), கேஎல்.ராகுல், ஷிகா் தவன், ஷிரேயஸ் ஐயா், ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், சஹல், மணிஷ் பாண்டே, ஷிவம் துபே, ஜஸ்ப்ரீத் பும்ரா, சா்துல் தாக்குா், நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தா், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai