Enable Javscript for better performance
Dwayne Bravo recalled to West Indies T20I squad- Dinamani

சுடச்சுட

    

    மூன்று வருடங்களுக்குப் பிறகு மே.இ. தீவுகள் அணியில் மீண்டும் இடம் பிடித்தார் பிராவோ!

    By எழில்  |   Published on : 14th January 2020 10:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    bravo9191911xx

     

    அக்டோபர் 2018-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் பிராவோ. 2004-ல் அறிமுகமான பிராவோ இதுவரை 40 டெஸ்டுகள், 164 ஒருநாள், 66 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    36 வயதான பிராவோ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறார். ஐபிஎல் போன்ற டி20 போட்டிகளுக்கு முக்கியத்துவம் தருவதாலும் காயங்கள் காரணமாகவும் கிரிக்கெட் சங்கத்துடனான மோதல்களாலும் அவரால் அதிகமான சர்வதேச ஆட்டங்களில் விளையாட முடியாமல் போய்விட்டது. ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் போன்ற உள்ளூர் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடப் போவதாகக் கடந்த அக்டோபர் மாதம் அவர் அறிவித்தார்.

    பிறகு, கடந்த மாதம் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வாபஸ் பெற்றார் பிராவோ. அதற்கான காரணத்தை அவர் கூறியதாவது: 

    மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றங்களால் சர்வதேச கிரிக்கெட்டுக்கு மீண்டும் வர முடிவெடுத்துள்ளேன். பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ், கேப்டன் கிரோன் பொலார்ட் ஆகியோரால் மீண்டும் அணிக்காக விளையாட ஆர்வமாக உள்ளேன். இளம் வீரர்களும் பொலார்ட், சிம்மன்ஸ், ஹோல்டர் போன்ற மூத்த வீரர்களும் அணியில் உள்ளார்கள். எனவே இந்த மாற்றங்களில் நானும் என்னுடைய பங்களிப்பை அளிக்கவுள்ளேன். மேற்கிந்தியத் தீவுகள் அணியை மீண்டும் கட்டமைத்து, தரவரிசையில் முன்னேற முடியும். என்னைத் தேர்வு செய்தபிறகு மே.இ. தீவுகளின் டி20 அணிக்கு முழு ஒத்துழைப்பை அளிப்பேன் என்று கூறினார்.

    இந்நிலையில் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான மே.இ. தீவுகள் அணியில் இடம்பிடித்துள்ளார் பிராவோ. 

    கடைசி ஓவர்களில் அணியின் பந்துவீச்சைப் பலப்படுத்துவதற்காக பிராவோ சேர்க்கப்பட்டுள்ளார் என்று மே.இ. தீவுகள் அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் ரோஜர் ஹார்பர் கூறியுள்ளார். மே.இ. தீவுகள் - அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் புதன் முதல் தொடங்கவுள்ளது. 

    இதையடுத்து டி20 உலகக் கோப்பையில் பிராவோ விளையாடுவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 2012, 2016 ஆகிய ஆண்டுகளில் மே.இ. தீவுகள் அணி உலகக் கோப்பையை வென்றபோது பிராவோவும் அந்த அணியில் இடம்பெற்றார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai