இந்த இந்திய வீரரால் ஐபிஎல்-லில் விளையாட முடியாது: பிசிசிஐ

மார்ச் 29 முதல் தொடங்கவுள்ள ஐபில் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பிரவீன் டாம்பே பங்குபெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது...
இந்த இந்திய வீரரால் ஐபிஎல்-லில் விளையாட முடியாது: பிசிசிஐ

மார்ச் 29 முதல் தொடங்கவுள்ள ஐபில் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பிரவீன் டாம்பே பங்குபெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பங்குபெற்ற வயதான வீரர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் வீரரான 48 வயது பிரவீன் டாம்பே. இவருடைய அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்.

இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டியில் டாம்பேவால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் கூறியதாவது:

ஐபிஎல் போட்டியில் விளையாடும் இந்திய வீரர், வேறு எந்த உள்ளூர் லீக் போட்டியிலும் கலந்துகொள்ளக் கூடாது. ஆனால் டாம்பே 2019 அபுதாபி டி10 போட்டியில் விளையாடியுள்ளார். ஓய்வு அறிவிப்பை வெளியிடாமல் வெளிநாட்டு லீக் போட்டியில் விளையாடியது பிசிசிஐ விதிகளுக்கு முரணானது. எனவே அவரால் இந்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாது என்று கூறியுள்ளது. ஐபிஎல் போட்டியின் புதிய தலைவர் பிரிஜேஷ் படேலும் இதை உறுதி செய்துள்ளார். 

டாம்பே, 2013-ல் 41 வயதில் ஐபிஎல் போட்டியில் அறிமுகமானார். 33 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடைசியாக 2016-ல் குஜராத் அணிக்காக விளையாடினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com