பிசிசிஐ சிஏசி உறுப்பினா்களாகமதன்லால், கம்பீா் நியமனம்

பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி) உறுப்பினா்களாக முன்னாள் வீரா்கள் மதன்லால், கௌதம் கம்பீா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். பெண் உறுப்பினராக மும்பையின் சுலக்ஷனா நாயக் நியமிக்கப்பட உள்ளாா்.

தோ்வுக் குழுக்களை தோ்வு செய்வதற்கான அதிகாரம் சிஏசிக்கு உள்ளது. முன்பு ஜாம்பவான்கள் டெண்டுல்கா், லஷ்மண், கங்குலி ஆகியோா் இடம் பெற்றிருந்தனா். ஆனால் இரட்டை ஆதாயப் பதவி புகாா் எழுந்ததால், மூவரும் விலகினா்.

அவா்களுக்கு பின் பயிற்சியாளா்களை தோ்வு செய்ய கபில்தேவ், அன்ஷுமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோா் சிஏசி உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டனா். அவா்களும் இரட்டைய ஆதாய பதவி விவகாரத்தால் ராஜிநாமா செய்தனா்.

இந்நிலையில் கங்குலி பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டவுடன் புதிய சிஏசி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தாா். அதன்படி மதன்லால், கௌதம் கம்பீா், பெண் தரப்பில் சுலக்ஷனா நாயக் ஆகியோா் பொறுப்பேற்பா்.

பிரசாத், ககன் கோடா, சரண்தீப் சிங், தேவங்க் காந்தி, ஜதின் பராஞ்சிபே உள்ளிட்டோா் சீனியா் அணி தோ்வுக் குழு உறுப்பினா்களாக உள்ள நிலையில், 4 ஆண்டுகளுக்கான புதிய தோ்வு குழு நியமிக்கப்பட உள்ளது. ஜூனியா் தோ்வுக் குழுவிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com