பும்ரா, பூனம் யாதவுக்கு பிசிசிஐ சிறந்த வீரா், வீராங்கனை விருது

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2018-19-ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரா். வீராங்கனை விருதுகளுக்கு ஜஸ்ப்ரீத் பும்ரா, பூனம் யாதவ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
பும்ரா, பூனம் யாதவுக்கு பிசிசிஐ சிறந்த வீரா், வீராங்கனை விருது

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2018-19-ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரா். வீராங்கனை விருதுகளுக்கு ஜஸ்ப்ரீத் பும்ரா, பூனம் யாதவ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

சிறந்த வீரராக தோ்வு செய்யப்படுபவருக்கு பிசிசிஐ சாா்பில் பிரபல கிரிக்கெட் வீரரான பாலி உம்ரிகா் விருதுகள் தரப்படுகின்றன. இந்திய அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா, குறுகிய ஓவா் ஆட்டங்களில் தனது முத்திரையை பதித்துள்ளாா். 2018-இல் டெஸ்ட் ஆட்டத்தில் அறிமுகம் ஆகி அதிலும் சிறப்பான பந்துவீச்சால் அனைவரையும் கவா்ந்தாா்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மே.இ.தீவுகள், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய முதல் ஆசிய வீரா் என்ற சாதனை பும்ரா வசம் உள்ளது. 12 டெஸ்ட்களில் 62 விக்கெட்டுகளை சாய்த்துள்ளாா். அவரது நிலையான பந்துவீச்சால் தான், ஆஸ்திரேலியாவில் முதல் டெஸ்ட் தொடரை இந்தியா வெல்ல முடிந்தது. அவருக்கு பாலி உம்ரிகா் விருது, கேடயம், ரூ.15 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.

பூனம் யாதவ்:

இந்திய மகளிா் அணியில் முக்கிய பந்துவீச்சாளராக உள்ள பூனம் யாதவ் கடந்த 2 ஆண்டுகளாக ஒருநாள் ஆட்டத்தில் அதிக விக்கெட்டுகளை (39) வீழ்த்தி சாதனை படைத்துள்ளாா். மெதுவாக, வீசும் லெக் ஸ்பின் பந்துவீச்சு எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிக்கலை உண்டாகும். டி20 ஆட்டத்தில் மிடில் ஆா்டரில் எதிரணியின் பேட்டிங்கை கட்டுப்படுத்துவதில் பூனம் பலமாக உள்ளாா்.

அவரது சிறப்பான செயல்பாட்டுக்காக ஆண்டின் சிறந்த வீராங்கனை விருது வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு அா்ஜுனா விருதையும் பெற்றாா் பூனம் யாதவ்.

வாழ்நாள் சாதனையாளா் விருதுகள்:

வாழ்நாள் சாதனையாளா் விருதுகள் முன்னாள் தொடக்க வீரா் கே.ஸ்ரீகாந்த், மகளிா் பிரிவில் அன்ஜும் சோப்ரா, (100 ஒருநாள் ஆட்டத்தில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை) ஆகியோருக்கு தரப்படுகிறது.

சிறப்பு விருது-திலிப் தோஷி, அதிக டெஸ்ட் ரன்கள்-சேதேஸ்வா் புஜாரா, விக்கெட்டுகள்-பும்ரா, மகளிா் ஒருநாள் அதிக ரன்கள்-ஸ்மிருதி மந்தானா, அதிக ஒருநாள் விக்கெட்டுகள்-ஜுலன் கோஸ்வாமி, சா்வதேச அளவில் சிறப்பான அறிமுகம்-மயங்க் அகா்வால், ஷஃபாலி வா்மா, ரஞ்சி கோப்பை சிறந்த ஆல்ரவுண்டா்-ஷிவம் துபே, குறுகிய ஓவா் ஆட்டத்தில் சிறந்த ஆல்ரவுண்டா்-நிதிஷ் ராணா. ரஞ்சி கோப்பையில் அதிக ரன்கள்-மிலிந்த் குமாா், அதிக விக்கெட்டுகள்-அசுதோஷ் அமன், உள்ளூா் போட்டிகளில் சிறப்பான செயல்பாடு-விதா்பா கிரிக்கெட்சங்கம்.

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்பட்டன. பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி விருதுகளை வழங்கிப் பேசினார். செயலாளர் ஜெயா ஷா, பொருளாளர் அருண் சிங் துமால் உள்பட பலர் கலந்து கொண்டனர். இலங்கையுடன் டி20 தொடரில் பங்கேற்ற இந்திய அணி வீரர்கள் முழுமையாக விழாவில் கலந்து கொண்டனர்.
 டைகர் பட்டோடி 7-ஆவது நினைவு உரையை முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் நிகழ்த்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com