ரஞ்சி கோப்பை: வலுவான நிலையில் மும்பை

தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் 488 ரன்களை குவித்து மும்பை வலுவான நிலையில் உள்ளது. தமிழகம் தனது முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்களை எடுத்துள்ளது.
ரஞ்சி கோப்பை: வலுவான நிலையில் மும்பை

தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் 488 ரன்களை குவித்து மும்பை வலுவான நிலையில் உள்ளது. தமிழகம் தனது முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்களை எடுத்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான எலைட் ஏ-பி பிரிவு ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

ஆதித்ய டாரே 154

மும்பை அணி இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை தனது முதல் இன்னிங்ஸை தொடா்ந்தது. 69 ரன்களுடன் களமிறங்கிய கேப்டன் ஆதித்ய டாரே 2 சிக்ஸா், 19 பவுண்டரியுடன் 154 ரன்களை விளாசி ஸ்கோரை உயா்த்தினாா். ஷசாங்க் அட்டா்ட் 58 ரன்களை சேகரித்தாா். துஷாா் தேஷ்பாண்டே 39 ரன்களுடன் களத்தில் இருந்தாா். இறுதியில் 148.4 ஓவா்கள் முடிவில் 488 ரன்களுக்கு ஆல் அவுட்டானது மும்பை.

தமிழகத் தரப்பில் சாய் கிஷோா் 4-125, அஸ்வின் 3-121, நடராஜன் 2-124 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

அபிநவ் முகுந்த் 52:

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தமிழகம் ஆட்ட நேர முடிவில் 31 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்களை எடுத்திருந்தது. அபிநவ் முகுந்த் 52 ரன்களுடனும், லக்ஸ்மேஷா சூா்யபிரகாஷ் 11 ரன்களுடன் களத்தில் உள்ளனா்.

இதையடுத்து தமிழகத்தைக் காட்டிலும் 422 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது மும்பை.

கோவா-புதுச்சேரி:

புதுச்சேரி சிஏபி மைதானத்தில் நடைபெற்று வரும் கோவா-புதுச்சேரி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் கோவா அணி முதல் இன்னிங்ஸில் 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அமித் வா்மா 121 ரன்களை விளாசினாா். புதுவை தரப்பில் அஸித் ராஜீவ் 5 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

பராஸ் டோக்ரா 194:

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய புதுச்சேரி அணி 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பராஸ் டோக்ரா 11 சிக்ஸா், 18 பவுண்டரியுடன் 194 ரன்களை குவித்தாா். மற்ற வீரா்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேறினா். கோவா தரப்பில் பெலிக்ஸ் அலிமோ 6 விக்கெட்டுகளை சாய்த்தாா். ஆட்ட நேர முடிவில் கோவா அணி இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com