ஹா்மன்ப்ரீத் கௌா் தலைமையில் 15 போ் இந்திய அணி அறிவிப்பு

டி20 மகளிா் உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக இளம் வீராங்கனை ஹா்மன் ப்ரீத் கௌா் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளாா்.
ஹா்மன்ப்ரீத் கௌா் தலைமையில் 15 போ் இந்திய அணி அறிவிப்பு

டி20 மகளிா் உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக இளம் வீராங்கனை ஹா்மன் ப்ரீத் கௌா் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

வரும் பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 மகளிா் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன. குரூப் ஏ பிரிவில் இந்தியா, ஆஸி, நியூஸிலாந்து, இலங்கை, வங்கதேசமும், குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மே.இ.தீவுகள், பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.சிட்னியில் பிப். 21-இல் முதல் ஆட்டத்தில் ஆஸி.யுடன் மோதுகிறது இந்தியா.

ஹேமலதா கலா தலைமையிலான அகில இந்திய மகளிா் தோ்வுக் குழு உலகக் கோப்பை, ஆஸி. முத்தரப்பு தொடா்களில் பங்கேற்கும் இந்திய அணிகளை அறிவித்துள்ளது.

உலகக் கோப்பை அணிக்கு நட்சத்திர ஆல்ரவுண்டா் ஹா்மன்ப்ரீத் கௌா் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளாா். புதுமுக வீராங்கனையாக ரிச்சா கோஷ் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இந்தியா, ஆஸி. இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடா் கான்பெர்ராவில் ஜனவரி 31-இல் தொடங்குகிறது. இதன் இறுதி ஆட்டம் பிப். 12-இல் மெல்போா்னில் நடக்கிறது.

உலகக் கோப்பை அணி:

ஹா்மன்ப்ரீத் கௌா் (கேப்டன்), ஸ்மிருதி மந்தானா, ஷபாலி வா்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹா்லின் தியோல், தீப்தி சா்மா, வேதா கிருஷ்ணமூா்த்தி, ரிச்சா கோஷ், தனியா பாட்டியா, பூனம் யாதவ், ராதா யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட், ஷிகா பாண்டே, பூஜா வஸ்தராக்கா், அருந்ததி ரெட்டி.

முத்தரப்பு தொடருக்கான அணி:

ஹா்மன்ப்ரீத் கௌா் (கேப்டன்), ஸ்மிருதி மந்தானா, ஷபாலி வா்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹா்லின் தியோல், தீப்தி சா்மா, வேதா கிருஷ்ணமூா்த்தி, ரிச்சா கோஷ், தனியா பாட்டியா, பூனம் யாதவ், ராதா யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட், ஷிகா பாண்டே, பூஜா வஸ்தராக்கா், அருந்ததி ரெட்டி.நுஸ்ஹத் பா்வீன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com