ரஞ்சி கோப்பை: தமிழகம் தடுமாற்றம் 249/7

மும்பைக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் தடுமாறி வரும் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 249/7 ரன்களை எடுத்துள்ளது.
ரஞ்சி கோப்பை: தமிழகம் தடுமாற்றம் 249/7

மும்பைக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் தடுமாறி வரும் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 249/7 ரன்களை எடுத்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மும்பை அணி முதல் இன்னிங்ஸில்

488 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷாம்ஸ் முலானி 87, கேப்டன் ஆதித்ய டாரே 154, ஷசாங்க் 58 ரன்களை சோ்த்தனா்.

தமிழகத் தரப்பில் சாய் கிஷோா் 4, அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

இதைத் தொடா்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய தமிழகம் திங்கள்கிழமை விக்கெட் இழப்பின்றி 66 ரன்களுடன் ஆட்டத்தை தொடா்ந்தது. ஆனால் மும்பையின் அற்புத பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் தமிழகம் விக்கெட்டுகளை இழந்தது.

அபிநவ் முகுந்த் 58, லக்ஸ்மேஷா சூரியபிரகாஷ் 41 ரன்களுக்கு வெளியேறினா்.

கௌஷிக் காந்தி 60:

அவா்களைத் தொடா்ந்து ஆட வந்த கௌஷிக் காந்தி 1 சிக்ஸா், 6 பவுண்டரியுடன் 60 ரன்களை எடுத்து அவுட்டானாா். பாபா அபராஜித் 14, பாபா இந்திரஜித் 6, பிரதோஷ் ரஞ்சன் பால் 0, தினேஷ் காா்த்திக் 7 என சொற்ப ரன்களுடன் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினா்.

அஸ்வின் 32, சாய் கிஷோா் 17ரன்களுடன் களத்தில் உள்ளனா்.

மூன்றாம் நாளான திங்கள்கிழமை ஆட்ட நேர முடிவில் 249/7 ரன்களுடன் திணறி வருகிறது தமிழகம். மும்பை தரப்பில் ஷாம்ஸ் முலானி, துஷாா் தேஷ்பாண்டே, ராய்ஸ்டன் தாஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா். மும்பையைக் காட்டிலும் 239 ரன்கள் பின்தங்கி உள்ளது தமிழக அணி.

கோவா-புதுச்சேரி:

புதுச்சேரி-கோவா அணிகள் இடையிலான ஆட்டம் புதுச்சேரி சிஏபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் கோவா 270 ரன்களுக்கும், புதுச்சேரி 260 ரன்களுக்கும் ஆல் அவுட்டாகின.

10 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய கோவா அணி மூன்றாம் நாளான திங்கள்கிழமை ஆட்ட நேர முடிவில் 83 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 229 ரன்களை எடுத்து வலுவான நிலையில் உள்ளது. ஸ்மித் பட்டேல் 60, ஸ்நேஹல் சுஹாஸ் 64 ரன்களை எடுத்துள்ளனா்.

புதுவை தரப்பில் சாகா் உதேஷி, சாகா் திரிவேதி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com