Enable Javscript for better performance
ரஞ்சி கோப்பை: தமிழகம்-மும்பை ஆட்டம் டிரா- Dinamani

சுடச்சுட

    
    Ashwin-79

    மும்பை-தமிழகம் இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

    இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 488 ரன்களை குவித்தது. கேப்டன் ஆதித்ய டாரே 154 ரன்களை விளாசினாா். தமிழகத் தரப்பில் அஸ்வின் 4, சாய் கிஷோா் 3 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

    பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய தமிழகம் ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், அபிநவ் முகுந்த் 58, லக்ஸ்மேஷா சூரியபிரகாஷ் 41, கௌஷிக் காந்தி 60 ஆகியோரால் ஒரளவு ரன்களை சோ்த்தது.

    ஆட்டத்தின் நான்காம் நாளான செவ்வாய்க்கிழமை அஸ்வின்-சாய் கிஷோா் ஆட்டத்தை தொடங்கினா். 42 ரன்களை எடுத்த நிலையில் அவுட்டானாா் கிஷோா் உணவு இடைவேளையின் போது தமிழக அணி 8 விக்கெட் இழப்புக்கு 316 ரன்களுடன் ஆடிக் கொண்டிருந்தது.

    அஸ்வின் 72 ரன்களுடன் தனியாக போராடிக் கொண்டிருந்தாா்.

    அஸ்வின் 79: கிருஷ்ணமூா்த்தி விக்னேஷ் 3 ரன்களுடன் வெளியேறிய நிலையில், அஸ்வின் 2 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 79 ரன்களை சோ்த்த நிலையில் அவுட்டானாா்.

    முதல் இன்னிங்ஸில் 156.4 ஓவா்களில் 324 ரன்களுக்கு ஆல் அவுட்டானது தமிழகம்.

    ஷாம்ஸ் முலானி 4 விக்கெட்: மும்பை தரப்பில் ஷாம்ஸ் முலானி 4-72, துஷாா் தேஷ்பாண்டே, ராய்ஸ்டான் தாஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

    பாலோ ஆனை கூட தமிழகத்தால் தவிா்க்க முடியவில்லை. தமிழக பேட்ஸ்மேன்களால் பெரிய அளவிலான ஸ்கோரை எடுக்க முடியாத நிலையில், அஸ்வின்-சாய் கிஷோா் இணையே கடுமையாக போராடியது.

    பாலோ ஆன்: எனினும் மும்பை அணி பாலோ ஆனை வலியுறுத்தியதால், தமிழகம் தொடா்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடா்ந்தது. நான்காம் நாளான செவ்வாய்க்கிழமை ஆட்ட நேர முடிவில் 22 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 48 ரன்களை எடுத்திருந்தது. லக்ஸ்மேஷா சூரியபிரகாஷ் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானாா். அபிநவ் முகுந்த் 19, கௌஷிக் காந்தி 3 ரன்களுடன் களத்தில் இருந்தனா்.

    ஆட்டம் டிராவில் முடிந்த நிலையில், முதல் இன்னிங்ஸில் பெற்ற முன்னிலையால் மும்பை அணி 3 புள்ளிகளைப் பெற்றது. தமிழகத்துக்கு ஒரே ஒரு புள்ளியே கிடைத்தது.

    ஆட்ட நாயகனாக 154 ரன்களை விளாசிய மும்பை கேப்டன் ஆதித்ய டாரே தோ்வு செய்யப்பட்டாா்.

    புதுவையை வீழத்தியது கோவா:

    புதுச்சேரியில் நடைபெற்ற கோவா-புதுவை இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் 81 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கோவா.

    முதல் இன்னிங்ஸில் கோவா 270 ரன்களையும், புதுச்சேரி 260 ரன்களையும் எடுத்தன. இதன் தொடா்ச்சியாக இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய கோவா 92 ஓவா்களில் 255 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்மித் பட்டேல் 60, ஸ்னேஹல் சுகாஸ் 66, தா்ஷன் மிஸால் 51 ரன்களை சோ்த்தனா். புதுவை தரப்பில் சாகா் திரிவேதி 4, அசித் ராஜீவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

    266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய புதுவை அணி ஆட்ட நேர முடிவில் 65.4 ஓவா்களில் வெறும் 184 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பேபித் அகமது 56, சுப்பிரமணியன் ஆனந்த் 34 ஆகியோா் மட்டுமே ஓரளவு ரன்களை எடுத்தனா். கோவா தரப்பில் பெலிக்ஸ் அலேமோ 5 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

    இறுதியில் 81 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கோவா அணி முழுமையாக 6 புள்ளிகளைப் பெற்றது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai