ஆஸ்திரேலியாவுடனான 2-வது ஒருநாள் ஆட்டம்: ரிஷப் பந்த் விலகல்!

ஆஸ்திரேலியாவுடனான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இருந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் விலகியுள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்


ஆஸ்திரேலியாவுடனான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இருந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் விலகியுள்ளார். 

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் ஆட்டத்தின்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தலையில் பந்து தாக்கியது. இது அவரது விக்கெட் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்தது.

இதன்காரணமாக, அவர் முதல் ஆட்டத்தில் கீப்பிங் செய்யவில்லை. அவருக்குப் பதிலாக கேஎல் ராகுல் கீப்பிங் பொறுப்பை ஏற்றார். எனவே, ஆஸ்திரேலியாவுடனான அடுத்த இரண்டு ஆட்டங்களில் அவர் பங்கேற்பது கேள்விக்குறியானது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுடனான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் அவர் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 

எனவே, 2-வது ஒருநாள் ஆட்டத்துக்காக ரிஷப் பந்த் இந்திய அணியுடன் ராஜ்காட் செல்லைவில்லை. சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து திரும்பியுள்ள அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமிக்குச் செல்லவுள்ளார். அங்கு அவருடைய செயல்பாட்டைப் பொறுத்தே 3-வது ஒருநாள் ஆட்டத்தில் அவர் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதேசமயம், 2-வது ஆட்டத்துக்கான மாற்று வீரர் குறித்த அறிவிப்பு எதையும் பிசிசிஐ வெளியிடவில்லை. எனவே, கேஎல் ராகுலே 3-வது ஆட்டத்துக்கும் கீப்பராக செயல்படுவார் எனத் தெரிகிறது. 

கன்கஷன் முறையை ஐசிசி அறிமுகப்படுத்திய பிறகு, இதன் காரணமாக ஒரு இந்திய வீரர் ஆட்டத்தில் இருந்து விலகுவது இதுவே முதன்முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com