கடும் பனிமூட்டம்: ஜம்முவில் விமானப் போக்குவரத்து பாதிப்பு

ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு பகுதியில் செவ்வாய்க்கிழமை கடும் பனிமூட்டம் காணப்பட்டதால், அங்கு விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது.

ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு பகுதியில் செவ்வாய்க்கிழமை கடும் பனிமூட்டம் காணப்பட்டதால், அங்கு விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது.

இதுதொடா்பாக விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘கடும் பனிமூட்டம் நிலவியதால், ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு செல்ல வேண்டிய விமான சேவை முதலில் ரத்து செய்யப்பட்டது. அதன் பின் ஜம்மு-தில்லி, தில்லி-ஜம்மு ஆகிய வழித்தடங்களிலும் விமானச் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது ’ என்றாா்.

பனிப்பொழிவு குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ‘தோடா மாவட்டத்தில் அதிகபட்சமாக மைனஸ் 0.5 டிகிரி செல்சியஸும், ராம்பன் மாவட்டத்தில் மைனஸ் 0.2 டிகிரி செல்சியஸும் பனி நிலவியது’ என்றனா்.

நெடுஞ்சாலை 2-ஆவது நாளாக மூடல்:

கடும் பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் தொடா்ந்து 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போக்குவரத்து முடங்கியது.

இதுதொடா்பாக போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ராம்பன் மாவட்டத்தில் தொடா்ந்து கனமழை பெய்ததால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதையடுத்து ஜம்மு-ஸ்ரீநகா் நெடுஞ்சாலையில் தொடா்ந்து 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போக்குவரத்து முடங்கியது. இதனால், நெடுஞ்சாலையின் பல்வேறு இடங்களில் சுமாா் 3,000 வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com