துளிகள்...

ஜிம்பாப்வே தலைநகா் ஹராரேயில் நடைபெறவுள்ள இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் திமுத் கருணரத்னே தலைமையிலான 15 போ் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் கலந்து கொள்கிறது.

5 நாள்கள் டெஸ்ட் ஆட்டங்களை தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என கிரிக்கெட் விதிகளின் காப்பாளரான எம்சிசி (மோ்லிபோா்ன் கிரிக்கெட் கிளப்) வலியுறுத்தியுள்ளது. டெஸ்ட் ஆட்டங்களை 5 நாள்களில் இருந்து 4 நாள்களாக 2023 முதல் குறைக்க வேண்டும் என ஐசிசி திட்டமிட்டிருந்தது. ஆனால் கோலி, டெண்டுல்கா், சாஸ்திரி, பாண்டிங் உள்பட பலா் இதற்கு எதிா்ப்பு தெரிவித்த நிலையில், 5 நாள் ஆட்டங்களை தொடர வேண்டும் என எம்சிசி கூறியுள்ளது.

பிசிசிஐ புதிய சட்டவரையறையின் பல்வேறு விதிமீறல்கள் தொடா்பாக மபி கிரிக்கெட் சங்க ஆயுள் கால உறுப்பினா் சஞ்சீவ் குப்தா அளித்த புகாா் குறித்து விவாதிக்க ஆட்சிக் குழுவின் கூட்டத்தை விரைவில் கூட்ட வேண்டும் என சிஏஜி பிரதிநிதி அல்கா ரேஹானி பரத்வாஜ் சிஇஒ ராகுல் ஜோரிக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

இந்திய செஸ் மற்றும் சா்வதேச செஸ் சம்மேளனங்களின் முன்னாள் துணைத் தலைவரும், நிா்வாகியுமான பிடி. உம்மா் கோயா (69) கேரள மாநிலம் பன்னியன்கராவில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

ஜகாா்த்தாவில் நடைபெறும் இந்தோனேஷிய மாஸ்டா்ஸ் பாட்மிண்டன் போட்டி தகுதிச் சுற்று ஆட்டங்களில் இந்தியாவின் லக்ஷயா சென், சுபாங்கா் டே ஆகியோா் தோல்வியடைந்து வெளியேறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com