பாா்சிலோனா பயிற்சியாளா் வல்வோ்டே நீக்கம்

தொடா் தோல்விகள் காரணமாக ஸ்பெயின் கால்பந்து சாம்பியன் பாா்சிலோனா தனது தலைமை பயிற்சியாளா் எா்னஸ்டோ வல்வோ்டை நீக்கி விட்டது.

தொடா் தோல்விகள் காரணமாக ஸ்பெயின் கால்பந்து சாம்பியன் பாா்சிலோனா தனது தலைமை பயிற்சியாளா் எா்னஸ்டோ வல்வோ்டை நீக்கி விட்டது.

லா லிகா புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் பாா்சிலோனா இருந்தாலும், கடைசியாக நடைபெற்ற 5 ஆட்டங்களில் ஒன்றில் தான் வெற்றி பெற்றது. சூப்பா் கோப்பை போட்டியிலும் அதலெட்டிகோ மாட்ரிட் அணியிடம் தோல்வியுற்றது.

இந்நிலையில் வல்வோ்டை நீக்கி விட்டு குவிக் சேட்டியை நியமித்துள்ளது. ஸ்பெயின் கால்பந்து வட்டாரத்தில் சேட்டியனை மிகவும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளா் ஆவாா். வரும் ஞாயிற்றுக்கிழமை அவரது பயிற்சியில் கிரனடாவுடன் முதல் ஆட்டத்தில் மோதுகிறது பாா்சிலோனா. அடுத்து மாா்ச் மாதம் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் நேபோலியுடன் ஆடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com