இதுதான் அவருடைய மிகச்சிறந்த பேட்டிங்: கோலியின் பாராட்டு மழையில் கே.எல். ராகுல்

சர்வதேச கிரிக்கெட்டில் இது அவருடைய சிறப்பான ஆட்டம். அந்த ஆட்டத்தில் பக்குவமும்...
இதுதான் அவருடைய மிகச்சிறந்த பேட்டிங்: கோலியின் பாராட்டு மழையில் கே.எல். ராகுல்

இந்தியாவுக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. 2-வது ஒருநாள் ஆட்டம் ராஜ்கோட்டில் நடைபெற்றது.

முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் குவித்தது. பிறகு விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 49.1 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது ஒருநாள் ஆட்டம் பெங்களூரில் நாளை நடைபெறுகிறது.

இந்த ஆட்டத்தில் 52 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் எடுத்து இந்திய அணி 340 ரன்கள் எடுக்க முக்கியக் காரணமாக இருந்தார் ராகுல். தவிர கீப்பிங்கிலும் அசத்தி அனைவருடைய பாராட்டையும் பெற்றார். இதனால் ஆட்ட நாயகன் விருது ராகுலுக்கு வழங்கப்பட்டது.

2-வது ஒருநாள் ஆட்டத்தில் ராகுலின் பங்களிப்பு குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

கே.எல். ராகுல் போன்ற வீரரை அணியிலிருந்து வெளியேற்றாமல் இருப்பது முக்கியமானது. அவர் விளையாடிய விதம் குறித்துப் பார்த்தீர்கள். சர்வதேச கிரிக்கெட்டில் இது அவருடைய சிறப்பான ஆட்டம். அந்த ஆட்டத்தில் பக்குவமும் அழகுணர்ச்சியும் இருந்தன. ராகுலின் கீப்பிங் பற்றிச் சொல்லவேண்டுமென்றால், ஒன்றில் நன்றாக விளையாடும்போது அது அடுத்தப் பொறுப்புகளிலும் வெளிப்படும். ராகுல் அதுபோன்று கீப்பிங் செய்வது எங்களுக்குப் புதிய யோசனைகளைத் தருகிறது. பல திறமைகள் கொண்ட வீரராக மாறி வருகிறார் ராகுல். இதுபோன்ற பொறுப்புகளை ஏற்கும்போது அது அணிக்கு மிகவும் உதவியாக உள்ளது என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com