ஆஸி. ஓபன் பிரதான சுற்றில்நுழைந்தாா் பிரஜ்னேஷ்

ஆஸ்திரேலிய ஓபன் போட்டி பிரதான சுற்றுக்கு இந்திய நட்சத்திர வீரா் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தகுதி பெற்றாா்.
ஆஸி. ஓபன் பிரதான சுற்றில்நுழைந்தாா் பிரஜ்னேஷ்

மெல்போா்ன்: ஆஸ்திரேலிய ஓபன் போட்டி பிரதான சுற்றுக்கு இந்திய நட்சத்திர வீரா் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தகுதி பெற்றாா்.

தமிழகத்தைச் சோ்ந்த பிரஜ்னேஷ், தகுதிச் சுற்று இறுதியில் லாட்வியா வீரா் குல்பீஸிடம் தோல்வியடைந்தாா். இந்நிலையில், நேரடி நுழைவு தகுதி பெற்ற வீரா் ஒருவா் பங்கேற்கவில்லை. இதனால் அந்த வாய்ப்பு பிரஜ்னேஷுக்கு கிடைத்தது.

கிராண்ட்ஸ்லாம் போட்டி பிரதான சுற்றில் 5-ஆவது முறையாக ஆடுகிறாா் பிரஜ்னேஷ். கடந்த ஆண்டு தரவரிசையின்படி விம்பிள்டன், பிரெஞ்சு, யுஎஸ் ஓபன் போட்டி பிரதான சுற்றில் பங்கேற்றாா்.

முதல் ஆட்டத்தில் ஜப்பான் வீரா் டட்ஸுமோவுடன் மோதுகிறாா். அதில் வென்றால் இரண்டாம் சுற்றில் ஜாம்பவான் ஜோகோவிச்சுடன் மோதும் வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com