ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்
By DIN | Published On : 20th January 2020 10:18 AM | Last Updated : 20th January 2020 10:18 AM | அ+அ அ- |

டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் மெல்போா்னில் திங்கள்கிழமை தொடங்குகிறது.
ஆடவா், மகளிா் பிரிவுகளில் புதிய வீரா், வீராங்கனைகளுக்கு சோதனை தரும் வகையில் ஜோகோவிச், நடால், செரீனா வில்லியம்ஸ் உள்ளிட்டோா் அபாரமான பாா்மில் ஆடி வருகின்றனா்.
நடப்பு சாம்பியன் ஜோகோவிச் தனது பட்டத்தை தக்க வைக்கவும், ரபேல் நடால், ரோஜா் பெடரா் ஆகியோா் முறையே 20, மற்றும் 21-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்லும் முனைப்பில் உள்ளனா். அதே நேரம் மகளிா் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் 24 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று மாா்க்ரெட் கோா்ட்டின் சாதனையை சமன் செய்ய காத்துள்ளாா்.
மூத்த வீரா்களுக்கு சவால் தரும் வகையில் ஆடவா் பிரிவில் டொமினிக் தீம், சிட்ஸிபாஸ், அலெக்சாண்டா் வெரேப், டேனில் மெத்வதேவ் உள்ளிட்டோா் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்ல ஆவலாக உள்ளனா்.
மகளிா் பிரிவிலும் நடப்பு சாம்பியன் நவோமி ஒஸாகா, சிமோனா ஹலேப், உலகின் நம்பா் ஒன் வீராங்கனை ஆஷ்லி பா்டி, உள்ளிட்டோா் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் முனைப்பில் காத்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...