ஆஸ்திரேலிய ஓபன்: 15 வயது வீராங்கனையுடன் மீண்டும் தோற்ற வீனஸ் வில்லியம்ஸ்!

இந்தப் பெண்ணுக்கு வானமே எல்லை என்று தோல்விக்குப் பிறகு கோகோவைப் புகழ்ந்தார் வீனஸ் வில்லியம்ஸ். 
ஆஸ்திரேலிய ஓபன்: 15 வயது வீராங்கனையுடன் மீண்டும் தோற்ற வீனஸ் வில்லியம்ஸ்!

ஏற்கெனவே ஆறு மாதங்களுக்கு முன்பு விம்பிள்டன் போட்டியின் முதல் சுற்றில் மூத்த வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸைத் தோற்கடித்துக் கவனம் பெற்றார் அமெரிக்காவைச் சேர்ந்த 15 வயது கோகோ காஃப். 

இந்நிலையில் இன்று தொடங்கிய ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் முதல் சுற்றிலும் முன்னாள் நெ. வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் - தரவரிசையில் 67-ம் இடத்தில் உள்ள கோகோ காஃப் ஆகிய இருவரும் மீண்டும் மோதியதில் அதே முடிவு தான் கிடைத்துள்ளது.

7-6 (5), 6-3 என நேர் செட்களில் வீன்ஸை மீண்டும் தோற்கடித்துள்ளார் 15 வயது கோகோ. 

இந்தப் பெண்ணுக்கு வானமே எல்லை என்று தோல்விக்குப் பிறகு கோகோவைப் புகழ்ந்தார் வீனஸ் வில்லியம்ஸ். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com