தேசிய அளவிலான எறிபந்து போட்டியில் சிறப்பிடம் பெற்ற தமிழக அணி வீரர்களுக்கு பாராட்டு

தேசிய அளவிலான எறிபந்து போட்டியில் 3-வது இடம் பெற்ற தமிழக அணி வீரர்களை திங்கள்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
எறிபந்து வீரர்களுக்கு பாராட்டு
எறிபந்து வீரர்களுக்கு பாராட்டு

பெரம்பலூர்: தேசிய அளவிலான எறிபந்து போட்டியில் 3-வது இடம் பெற்ற தமிழக அணி வீரர்களை திங்கள்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.

பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தேசிய அளவிலான எறிபந்து போட்டியில் 17 வயதுக்குள்பட்ட பிரிவில் பங்கேற்க தமிழக அணி வீரர்களுக்கான தேர்வு அண்மையில் நடைபெற்றது. இத் தேர்வில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வி. ஜெயசங்கர், ஜாய்சன் ஜோஸ், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ரெனியஸ் ஜான் டைசன், மாதவன், சென்னையைச் சேர்ந்த முகேஷ், ஜோதீஸ்வரன், பெரம்பலூரைச் சேர்ந்த முகமது காதிர் அலி, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அனுஷ் அரவிந்த், கோவையைச் சேர்ந்த சிவநேசன், தர்மபுரியைச் சேர்ந்த முத்தமிழ், மதுரையைச் சேர்ந்த சக்திதாசன், கரூரைச் சேர்ந்த தருண் ஆகிய 12 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த ஜன. 12 முதல் 16 ஆம் தேதி வரை சத்தீஸ்கர் மாநிலம், துர்க் என்னும் இடத்தில் நடைபெற்ற 17 வயதுக்குள்பட்ட பிரிவினருக்கான தேசிய அளவிலான எறிபந்து போட்டியில், தமிழக அணி சார்பில் பங்கேற்ற வீரர்கள் 3 ஆம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதையடுத்து, வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் அணி பயிற்சியாளர் பிரபாகரன் ஆகியோரை, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின்போது, முதன்மைக் கல்வி அலுவலர் க. மதிவாணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com