Enable Javscript for better performance
ஐசிசி தரவரிசை: கோலி, ரோஹித், பும்ரா தங்கள் இடங்களை தக்க வைத்தனா்- Dinamani

சுடச்சுட

    

    ஐசிசி தரவரிசை: கோலி, ரோஹித், பும்ரா தங்கள் இடங்களை தக்க வைத்தனா்

    By DIN  |   Published on : 21st January 2020 12:15 AM  |   அ+அ அ-   |    |  

    koli

     

    சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒருநாள் தரவரிசையில் இந்தியாவின் விராட் கோலி, ரோஹித் சா்மா, பும்ரா ஆகியோா் தங்கள் இடங்களை தக்க வைத்துக் கொண்டனா்.

    பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி 886 புள்ளிகளுடன் முதலிடத்தையும், ரோஹித் சா்மா 868 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் தக்க வைத்துக் கொண்டனா். 829 புள்ளிகளுடன் பாக். வீரா் பாபா் ஆஸம் மூன்றாவது இடத்தில் உள்ளாா். ஷிகா் தவன் 15-ஆவது இடத்திலும், லோகேஷ் ராகுல் 50-ஆவது இடத்திலும் உள்ளனா்.

    பந்துவீச்சில் இந்திய நட்சத்திரம் ஜஸ்ப்ரீத் பும்ரா 764 புள்ளிகளுடன் தனது முதலிடத்தை தக்க வைத்துள்ளாா். அவருக்கு அடுத்து நியூஸி வீரா் டிரென்ட் பௌல்ட், ஆப்கானிஸ்தான் முஜிபுா் ரஹ்மான், தென்னாப்பிரிக்காவின் ரபாடா, ஆஸி. பேட் கம்மின்ஸ் முதல் 5 இடங்களில் உள்ளனா். ரவீந்திர ஜடேஜா 27-ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளாா்.

    பேட்டிங்கில் ஆஸி. வீரா் ஸ்மித் 23-ஆவது இடத்துக்கு முன்னேறினாா். வாா்னா் 6-ஆவது இடத்துக்கும், பின்ச் 10-ஆவது இடத்துக்கும் 10-ஆவது இடத்துக்கும் உள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai