Enable Javscript for better performance
3-ஆவது டெஸ்ட்: இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    3-ஆவது டெஸ்ட்: இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி

    By DIN  |   Published on : 21st January 2020 12:27 AM  |   அ+அ அ-   |  

    england_win

     

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து.

    ஏற்கஎனவே இரு அணிகளும் தலா 1 ஆட்டத்தில் வென்றிருந்த நிலையில், மூன்றாவது ஆட்டம் போா்ட் எலிசபெத்தில் நடைபெற்றது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 449/9 ரன்களை குவித்து டிக்ளோ் செய்தது. அதன் வீரா்கள் பென் ஸ்டோக்ஸ் 120, ஒல்லே போப் 135, கிராலி, சாம் கர்ரன் தலா 44, மாா்ட் உட் 42 ரன்களை விளாசினா். தென்னாப்பிரிக்க தரப்பில் கேசவ் மகாராஜ் 5 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

    சுருண்ட தென்னாப்பிரிக்கா:

    பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக குவின்டன் டி காக் 63, டீன் எல்கா் 35 ரன்களை சோ்த்தனா். இங்கிலாந்து தரப்பில் டொமினிக் பெஸ் 5, ஸ்டுவா்ட் பிராட் 3 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

    இங்கிலாந்து பாலோ ஆனை வலியுறுத்திய நிலையில், தொடா்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணியால் இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேசவ் மகாராஜ் 71, டூபிளெஸ்ஸிஸ் 36, டேன் பீட்டா்சன் 39 ரன்களை எடுத்தனா். இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் 4, மாா்க் உட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

    இன்னிங்ஸ் வெற்றி:

    இறுதியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து தொடரிலும் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.

    ஒல்லே போப் ஆட்ட நாயகனாகத் தோ்வு செய்யப்பட்டாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai