காயத்துக்கு ஆறு வாரம் ஓய்வு தேவை: நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் இஷாந்த் சர்மா பங்கேற்பது சந்தேகம்!

இது மிகவும் தீவிரமானது. எனவே அவர் ஆறு வாரம் ஓய்வில் இருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்... 
காயத்துக்கு ஆறு வாரம் ஓய்வு தேவை: நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் இஷாந்த் சர்மா பங்கேற்பது சந்தேகம்!

தில்லியில் நடைபெற்ற விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்குக் காயம் ஏற்பட்டது.

விதர்பாவின் 2-வது இன்னிங்ஸில், 5-வது ஓவரை இஷாந்த் சர்மா வீசினார். அப்போது, கள நடுவரிடம் எல்பிடபிள்யூ கோரியபோது தடுமாறி கீழே விழுந்தார். இதனால் அவருக்குக் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மைதானத்தில் இஷாந்துக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இஷாந்த் சர்மாவின் காயம் கிரேட் 3 என்கிற அளவில் தீவிரமாக உள்ளதால், அவரால் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் பிப்ரவரி 21 அன்றும் அதற்கு முன்பு பயிற்சி ஆட்டம் பிப்ரவரி 14 அன்றும் தொடங்குகின்றன. 

தில்லி கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் வினோத் திஹாரா, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

எம்.ஆர்.ஐ. பரிசோதனையில் இஷாந்த் சர்மாவுக்கு கிரேட் 3 காயம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது மிகவும் தீவிரமானது. எனவே அவர் ஆறு வாரம் ஓய்வில் இருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். இது அவருக்குப் பின்னடைவு தான் என்று கூறியுள்ளார். இதையடுத்து நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் இஷாந்த் சர்மா பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இஷாந்த் சர்மாவுக்குப் பதிலாக சைனி இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறுவார் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com