நியூஸிலாந்து தொடர்: ஷிகர் தவனுக்குப் பதில் சஞ்சு சாம்சன், பிருத்வி ஷா சேர்ப்பு

நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஷிகர் தவனுக்குப் பதில் முறையே பிருத்வி ஷா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நியூஸிலாந்து தொடர்: ஷிகர் தவனுக்குப் பதில் சஞ்சு சாம்சன், பிருத்வி ஷா சேர்ப்பு


நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஷிகர் தவனுக்குப் பதில் முறையே பிருத்வி ஷா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. இதில், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் ஷிகர் தவன் சேர்க்கப்பட்டிருந்தார்.

ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் ஷிகர் தவனுக்குக் காயம் ஏற்பட, நியூஸிலாந்து தொடரில் அவர் பங்கேற்பது கேள்விக்குறியானது.

இந்நிலையில், ஒருநாள் தொடரில் அவருக்குப் பதில் பிருத்வி ஷா சேர்க்கப்பட்டுள்ளார். டி20 தொடரில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.

டி20 அணி:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் பந்த், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஜாஸ்பிரீத் பூம்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகுர்.

ஒருநாள் அணி:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), பிருத்வி ஷா, கேஎல் ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், ரிஷப் பந்த், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா, ஜாஸ்பிரீத் பூம்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாகுர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com