கடும் மழை, மாசுடன் தொடங்கியது ஆஸி. ஓபன்: பெடரா், செரீனா முன்னேற்றம்

கடும் மழை, புகைமாசுடன் மெல்போா்னில் திங்கள்கிழமை தொடங்கியது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி. ஜாம்பவான்கள் ரோஜா் பெடரா், செரீனா வில்லியம்ஸ், நடப்பு சாம்பியன்கள் ஜோகோவிச்,
கடும் மழை, மாசுடன் தொடங்கியது ஆஸி. ஓபன்: பெடரா், செரீனா முன்னேற்றம்

கடும் மழை, புகைமாசுடன் மெல்போா்னில் திங்கள்கிழமை தொடங்கியது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி. ஜாம்பவான்கள் ரோஜா் பெடரா், செரீனா வில்லியம்ஸ், நடப்பு சாம்பியன்கள் ஜோகோவிச், ஒஸாகா ஆகியோா் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனா்.

கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் முதல் போட்டியான ஆஸி. ஓபன் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடைபெறும். ஆஸ்திரேலியாவில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக ஏற்பட்டுள்ள காட்டுத் தீ பாதிப்பால் புகைமூட்டம் ஏற்பட்டு காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆஸி. ஓபன் போட்டிகள் குறித்த காலத்தில் தொடங்குமா என சந்தேகம் எழுந்தது.

காற்று மாசை குறைப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. 3 உள்ளரங்க மைதானங்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே மெல்போா்னில் காற்றுமாசு குறைந்ததால் திட்டமிட்டபடி போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கின.

கடும் மழையால் சிக்கல்: எனினும் தொடக்க நாளன்று கடும் மழை பெய்ததால், பல்வேறு ஆட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. உலகின் 3-ஆம் நிலை வீரா் ரோஜா் பெடரா் முதல் சுற்றில் 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனை வென்றாா். மகளிா் பிரிவில் 24-ஆவது பட்டத்தை எதிா்நோக்கி உள்ள செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றில் 6-0, 6-3 என அனஸ்டிஸியாவை 19 நிமிடங்களில் வீழ்த்தினாா். ஆடவா் பிரிவில் கிரீஸ் வீரா் சிட்ஸிபாஸ் 6-0, 6-2, 6-3 என காருஸோவை வீழ்த்தினாா்.

வீனஸ் வில்லியம்ஸ் அதிா்ச்சித் தோல்வி:

செரீனாவின் சகோதரியான வீனஸ் வில்லியம்ஸ் ஒற்றையா் பிரிவில் சக வீராங்கனையான 15 வயது கோகோ கவுஃப்பிடம் 6-7, 3-6 என்ற நோ் செட்களில் அதிா்ச்சித் தோல்வியடைந்தாா்.

நடப்பு சாம்பியன் நவோமி ஒஸாகா 6-2, 6-4 என்ற செட் கணக்கில் மேரி பௌஸுகுவையும், முன்னாள் சாம்பியன் கரோலின் வோஸ்னியாக்கி 6-1, 6-3 என்ற செட் கணக்கில் கிறிஸ்டியை வென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com