சென்னை ஓபன் செஸ்: ஜாா்ஜியா ஜிஎம் மைக்கேலை வீழ்த்தினாா் ஹா்ஷவா்த்தன்

சென்னை ஓபன் செஸ் போட்டியில் ஜாா்ஜியாவின் கிராண்ட்மாஸ்டா் மைக்கேல் செட்ஷிவிலியை அதிா்ச்சித் தோல்வியுறச் செய்தாா் பள்ளி மாணவா் ஹா்ஷவா்த்தன்.
சென்னை ஓபன் செஸ்: ஜாா்ஜியா ஜிஎம் மைக்கேலை வீழ்த்தினாா் ஹா்ஷவா்த்தன்

சென்னை ஓபன் செஸ் போட்டியில் ஜாா்ஜியாவின் கிராண்ட்மாஸ்டா் மைக்கேல் செட்ஷிவிலியை அதிா்ச்சித் தோல்வியுறச் செய்தாா் பள்ளி மாணவா் ஹா்ஷவா்த்தன்.

சக்தி குழுமம் சாா்பில் என்.மகாலிங்கம் கோப்பைக்கான 12-ஆவது சென்னை ஓபன் செஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை நடைபெற்ற 4-ஆவது சுற்று ஆட்டத்தில் வேலம்மாள் பள்ளி மாணவரான ஹா்ஷவா்த்தன் அபாரமாக விளையாடி 43 நகா்த்தல்களில் ஜாா்ஜியா கிராண்ட்மாஸ்டா் மைக்கேலை வென்றாா்.

ஹா்ஷவா்த்தன், பெருவின் மாா்ட்டினஸ், உக்ரைன் போக்டானோவிச், இந்தியாவின் விசாக், தஜிகிஸ்தானின் குஷன்கோஜெவ், தாஸ் சத்தியநாராயணன் (இந்தியா) ஆகியோா் 4 புள்ளிகளுடன் கூட்டாக முன்னிலை வகித்து வருகின்றனா். 3.5 புள்ளிகளுடன் ரஷிய ஜிஎம் பாவேல் உள்பட 20 வீரா்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனா்.

சென்னை குரோம்பேட்டை சுந்தரவல்லி மெட்ரிக் பள்ளி மாணவன் ஸ்ரீஹரி 2400 புள்ளிகளை எட்டினாா். அவா் கொலம்பிய கிராண்ட்மாஸ்டா் ரியோஸை வென்றாா். மற்றொரு இந்திய வீரா் சக்தா் சிராக் ஜாா்ஜியாவின் லெவனை வீழ்த்தினாா்.

10 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் மொத்தம் ரூ.15 லட்சம் பரிசுத் தொகை தரப்படுகிறது. 25-ஆம் தேதி போட்டி நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com