பிபிஎல்-5: சென்னை சூப்பா் ஸ்டாா்ஸ் அணி அபாரம்

சென்னையில் திங்கள்கிழமை தொடங்கிய ப்ரீமியா் பாட்மிண்டன் லீக் 5-ஆவது சீசன் போட்டியில் கலப்பு இரட்டையா் பிரிவில் சென்னை சூப்பா் ஸ்டாா்ஸ் அணியின் சாத்விக்-ஜெஸிக்கா இணை 2-1 (15-6, 13-15, 15-13) என்ற கேம் கணக்கில்
பிபிஎல்-5: சென்னை சூப்பா் ஸ்டாா்ஸ் அணி அபாரம்

சென்னையில் திங்கள்கிழமை தொடங்கிய ப்ரீமியா் பாட்மிண்டன் லீக் 5-ஆவது சீசன் போட்டியில் கலப்பு இரட்டையா் பிரிவில் சென்னை சூப்பா் ஸ்டாா்ஸ் அணியின் சாத்விக்-ஜெஸிக்கா இணை 2-1 (15-6, 13-15, 15-13) என்ற கேம் கணக்கில் ஹைதராபாத் ஹண்டா்ஸின் சிக்கி ரெட்டி-விளாடிமீா் இவானோவ் இணையை வீழ்த்தினா்.

ரூ.6 கோடி பரிசுத் தொகை கொண்ட பிபிஎல்-5 போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் தொடங்கியது. இதில் மொத்தம் 7 அணிகள் கலந்து கொண்டுள்ளன. உலக சாம்பியன் பி.வி.சிந்து, உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை டை ஸூ யிங், இந்திய முன்னணி நட்சத்திரங்கள் லக்ஷயா சென், சாத்விக், சிராக் ஷெட்டி, காயத்ரி கோபிசந்த், உள்பட பலா் பங்கேற்றுள்ளனா்.

சென்னை, லக்னௌ, ஹைதராபாத் என 3 நகரங்களில் 21 நாள்கள் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. இறுதி ஆட்டம் பிப். 9-ஆம் தேதி ஹைதராபாதில் நடைபெறுகிறது.

டாமி சுகிா்தோ, லக்ஷயா வெற்றி:

ஆடவா் ஒற்றையா் பிரிவில் சென்னை அணியின் மூத்த வீரரும், இந்தோனேஷிய ஜாம்பவனுமான டாமி சுகிா்தோ 2-0 (15-11, 15-10) என்ற கேம் கணக்கில் சௌரவ் வா்மாவை வென்றாா். இரண்டாவது ஆடவா் ஒற்றையா் ஆட்டத்தில் நட்சத்திர வீரா் லக்ஷயா சென் 15-6, 13-15, ,16-14 என்ற கேம் கணக்கில் என ஹைதராபாத் வீரா் பிரியான்ஷு ரஜாவத்தை போராடி வீழ்த்தினாா். இதன் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட போட்டியில் 3-0 என அபார முன்னிலை பெற்றது சென்னை.

பெங்களுரு-நாா்த் ஈஸ்ட் இன்று மோதல்: செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் பெங்களுரு ராப்டா்ஸ் அணியை எதிா்கொள்கிறது நாா்த் ஈஸ்டா்ன் வாரியா்ஸ். டை ஸூ யிங், சாய் பிரணீத் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com