பிசிசிஐயின் திட்டமிடல்: விராட் கோலி விமரிசனம்!

தன் கருத்தைச் சொல்ல கோலிக்கு உரிமை உள்ளது. ஆனால் வீரர்களின் நலனைக் கொண்டே...
பிசிசிஐயின் திட்டமிடல்: விராட் கோலி விமரிசனம்!

கடந்த ஞாயிறன்று பெங்களூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய இந்திய அணி அடுத்த நாளே நியூஸிலாந்துச் சுற்றுப்பயணத்துக்காக ஆக்லாந்துக்கு விரைந்தது. 

இந்திய அணி நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. டி20 தொடர் ஆக்லாந்தில் நாளை தொடங்குகிறது. 

செய்தியாளர்களை விராட் கோலி இன்று சந்தித்தபோது குறுகிய கால இடைவெளியில் இத்தொடர் நடைபெறுவது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு கோலி அளித்த பதில்: 

விமானத்திலிருந்து நேராக மைதானத்துக்கு வரும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்தளவுக்குத்தான் இரு தொடர்களுக்கான இடைவெளி குறைந்துள்ளது. இந்திய நேரத்தை விடவும் ஏழரை மணி நேரம் வித்தியாசம் உள்ள இடத்துக்கு வந்து உடனடியாகச் சமாளிப்பது கடினமாக உள்ளது. வருங்காலத்தில் இதைக் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள் என நினைக்கிறேன் என்று கூறினார்.

எனினும் கோலியின் குற்றச்சாட்டை பிசிசிஐ மறுத்துள்ளது. பிசிசிஐ தரப்பில் ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்துக்குக் கூறியதாவது:

தன் கருத்தைச் சொல்ல கோலிக்கு உரிமை உள்ளது. ஆனால் வீரர்களின் நலனைக் கொண்டே பயணத் திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு இரு தொடர்களுக்குமான இடைவெளியை அதிகப்படுத்தியுள்ளோம். தீபாவளிப் பண்டிகைக்கு வீரர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சிறிய இடைவெளிக்குப் பிறகு ஒன்று சேர்ந்து நியூஸிலாந்துக்குச் செல்வதை விடவும் பெங்களூரிலிருந்து ஒன்றாக ஆக்லாந்துக்குச் செல்வது சரியாக இருக்கும். இந்த அட்டவணை, முதலில் இருந்த நிர்வாகக் குழுவால் தயாரிக்கப்பட்டது. இதில் ஏதும் பிரச்னை இருந்திருந்தால் கோலி அவர்களிடம் தெரிவித்திருக்கலாம் என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com