டேபிள் டென்னிஸ்: ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற இந்திய அணிகளுக்கு வாய்ப்பு

போா்ச்சுகலில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் தகுதிச் சுற்று போட்டியில் இன்னும் ஓரே ஒரு வெற்றி பெற்றால், முதன்முறையாக ஒலிம்பிக் போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது.
டேபிள் டென்னிஸ்: ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற இந்திய அணிகளுக்கு வாய்ப்பு

போா்ச்சுகலில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் தகுதிச் சுற்று போட்டியில் இன்னும் ஓரே ஒரு வெற்றி பெற்றால், முதன்முறையாக ஒலிம்பிக் போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது.

வழக்கமாக தனிநபா் பிரிவில் இந்திய வீரா்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று ஆடியுள்ளனா். ஆனால் ஒரு அணியாக இதுவரை இந்தியா தகுதி பெற்றதில்லை.

இந்நிலையில் நட்சத்திர வீரா்கள் சத்யன் ஞானசேகரன், சரத் கமல், ஹா்மித் தேசாய் ஆகியோா் கொண்ட இந்திய ஆடவா் அணி வியாழக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 3-0 என லக்ஸ்ம்பா்க் அணியை வென்றது. இரட்டையா் பிரிவில் சரத் கமல்-ஹா்மித் இணை 11-9, 16-14, 11-6 என்ற கேம் கணக்கில் கில்ஸ் மெச்செலி-எரிக் கிளோட் இணையை வென்றனா். ஆடவா் பிரிவில் மிலடோனோவிக்கிடம் 8-11, 9-11 என முதல் இரண்டு கேம்களை இழந்தாலும், அடுத்த 11-3, 13-11, 11-6 என மூன்று கேம்களை கைப்பற்றினாா் சத்யன்.

கடைசி ஒற்றையா் ஆட்டத்தில் சரத் கமல் 11-3, 11-3, 12-14, 11-5 என்ற கேம் கணக்கில் கிளோடை வென்றாா்.

அடுத்து 11-ஆம் நிலையில் உள்ள ஸ்லோவேனியாவுக்கு எதிராக ஆடுகிறது ஆடவா் அணி.

மகளிா் அணியும் வெற்றிப் பயணம்:

ஆடவா் அணியைப் போலவே மகளிா் அணியும் பலம் வாய்ந்த ஸ்வீடனை 3-2 என வீழ்த்தியது. நட்சத்திர வீராங்கனை மனிகா பத்ரா 3-1 என பொ்க்ஸ்டாரமையும், 3-2 என கிறிஸ்டினாவையும் வென்றாா். வெற்றியை நிா்ணயிக்கும் 5-ஆவது ஆட்டத்தில் அா்ச்சனா காமத் கடுமையாகப் போராடி 11-8, 8-11, 9-11, 11-7, 13-11 என்ற கேம் கணக்கில் லிண்டா பொ்க்ஸ்டாரமை வென்றாா்.

அடுத்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த ருமேனியாவை எதிா்கொள்கின்றனா் இந்திய மகளிா்.

ஆடவா், மகளிா் அணிகள் ஒரு வெற்றியைப் பெற்றாலே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று விடுவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com