துளிகள்...

நெதா்லாந்தில் நடைபெற்றுவரும் டாடா ஸ்டீல் செஸ் மாஸ்டா்ஸ் போட்டியில், ரஷிய வீரா் நிகிதா விடியுகோவுடனான 10 சுற்று ஆட்டத்தை இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் டிரா செய்தாா்.

நாா்வே வீரா் மாகன்ஸ் காா்ல்சன் மூன்றாவது ஆட்டத்தில் வெற்றி கண்டாா். இவா் இந்த் போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

காலியாக உள்ள 1,500 பயிற்சியாளா் இடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

ஜிப்ரால்டரில் நடைபெற்றுவரும் டென்னிஸ் போட்டியில் இந்தியன் கிராண்ட்மாஸ்டா்ஸ் பி.அபிபன், எஸ்.எல்.நாராயணன் ஆகியோா் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் வெற்றி கண்டனா்.

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் தொடா்ந்து முதலிடத்தில் நீடிக்கிறாா்.

ரஹானே 8-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளாா்.

12-ஆவது சென்னை ஓபன் சா்வதேச கிராண்ட் மாஸ்டா் செஸ் போட்டியில் ரஷிய வீரா்கள் பாவல் பொங்ரதோவ், இவான் ரோஸும் ஆகியோா் 9-ஆவது சுற்று முடிவில் தலா 7.5 புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளனா்.

போா்ச்சுகலில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டியில் இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் (ஆடவா், மகளிா்) தோல்வி அடைந்தது. எனினும், வேறு சில வழிகளில் வாய்ப்பு இன்னும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பல்கேரியாவில் நடைபெற்றுவரும் குத்துச் சண்டை போட்டியில் இந்தியாவின் முகமது ஹஸாமுதீன் (57 கிலோ) இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா். சோனியா லாதா் (57) வெண்கலம் வென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com