மீண்டும் திணறும் தென் ஆப்பிரிக்கா: முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

இங்கிலாந்துடனான 4-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 183 ரன்களுக்கு ஆட்டமிழந்து 217 ரன்கள் பின்தங்கியுள்ளது.
புகைப்படங்கள்: ஐசிசி | டிவிட்டர்
புகைப்படங்கள்: ஐசிசி | டிவிட்டர்


இங்கிலாந்துடனான 4-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 183 ரன்களுக்கு ஆட்டமிழந்து 217 ரன்கள் பின்தங்கியுள்ளது.

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டம் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்து 400 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி மீண்டும் திணறல் ஆட்டத்தையே வெளிப்படுத்தியது.

இதன் காரணமாக, 2-வது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய 6-வது பந்திலேயே தென் ஆப்பிரிக்க அணி பிலாண்டர் விக்கெட்டை இழந்தது.

இதையடுத்து டி காக்கும், பிரிட்டோரியஸும் ஓரளவு நல்ல பாட்னர்ஷிப்பை அமைத்தனர். இதனால், தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களைக் கடந்தது. இந்த இணை 8-வது விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிட்டோரியஸ் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறிது நேரத்திலேயே அரைசதம் அடித்த டி காக்கும் 76 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இதன்மூலம், தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணித் தரப்பில் மார்க் வுட் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதையடுத்து, 217 ரன்கள் முன்னிலைப் பெற்ற போதிலும், இங்கிலாந்து அணி பாலோ ஆனுக்கு அழைக்காமல் 2-வது இன்னிங்ஸ் பேட்டிங்கையே தேர்வு செய்து விளையாடி வருகிறது.

4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே 1-2 என்ற கணக்கில் பின்தங்கியிருக்கும் நிலையில், இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் 217 ரன்கள் பின்தங்கியிருப்பது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com