ஐபிஎல் இறுதி ஆட்டம் எங்கே நடக்கிறது? சௌரவ் கங்குலி

ஐபிஎல் இறுதி ஆட்டம் மும்பையில் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் இறுதி ஆட்டம் எங்கே நடக்கிறது? சௌரவ் கங்குலி


ஐபிஎல் இறுதி ஆட்டம் மும்பையில் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த கங்குலி பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளிக்கையில்,

"நியூஸிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி பழைய தேர்வுக் குழுவால் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன் புதிய தேர்வுக் குழுவின் முதல் கூட்டம் நடைபெறும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான நேர்காணல் விரைவில் நடைபெறும்.

கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் கம்பீருக்கான மாற்று குறித்து முடிவு செய்துள்ளோம். மதன் லால் மற்றும் சுலக்ஷ்னா ஆகியோர் உள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். 

ஹர்திக் பாண்டியாவால் தற்போது விளையாட முடியாது. அவர் முழு உடற்தகுதி பெற இன்னும் நேரம் எடுக்கும். 

வரும் ஐபிஎல் சீசனில் கன்கஷன் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு முன்னணி சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும்  அனைத்து நட்சத்திரங்கள் ஆட்டத்தை பிசிசிஐ நடத்துகிறது. ஐபிஎல் இறுதி ஆட்டம் மும்பையில் நடைபெறும்.

ஐபிஎல் ஆட்டங்கள் மாலை 4 மணிக்கும், இரவு 8 மணிக்கும் தொடங்கும். 5 ஆட்டங்கள் 4 மணி ஆட்டங்களாக நடைபெறவுள்ளன" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com