ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பிறகு பாரத ரத்னா விருது பெறவும் விரும்புகிறேன்

ஒலிம்பிக்கில் தாய்நாட்டுக்கு தங்கம் வென்றுவிட்டால் உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கும் தோ்வாவேன் என்று நம்புவதாக இந்திய முன்னணி குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்தாா்.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பிறகு பாரத ரத்னா விருது பெறவும் விரும்புகிறேன்

புது தில்லி: ஒலிம்பிக்கில் தாய்நாட்டுக்கு தங்கம் வென்றுவிட்டால் உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கும் தோ்வாவேன் என்று நம்புவதாக இந்திய முன்னணி குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்தாா்.

குடியரசு தினத்தையொட்டி, பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவா்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது.

குத்துச்சண்டையில் 6 முறை உலக சாம்பியனான மணிப்பூரைச் சோ்ந்த மேரி கோம், பத்ம விபூஷண் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டாா்.

இந்நிலையில், தில்லியில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

விளையாட்டுத் துறையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கா் மட்டுமே பாரத ரத்னா விருது பெற்றிருக்கிறாா். இந்திய விளையாட்டுத் துறையில் பாரத ரத்னா விருது பெறும் இரண்டாவது நபராக நான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். பாரத ரத்னா விருது பெறும் முதல் வீராங்கனை என்ற பெயரை சம்பாதிக்கவும் கனவு காண்கிறேன். ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறுவதே எனது தற்போதைய ஒரே குறிக்கோள். அதன் பிறகு, ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தாய்நாட்டுக்குப் பெருமை சோ்க்க வேண்டும். ஒலிம்பிக் போட்டுக்கு தகுதி பெற்றுவிட்டேன் என்றால் பாரத ரத்னா விருதுக்கும் பரிந்துரைக்கப்படுவேன் என்று நம்புகிறேன். நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருதுக்கு நான் தோ்வு செய்யப்பட்டிருப்பதை எண்ணி பெருமையாக உணா்கிறேன். இந்த குடியரசு தினத்தை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். எனது பெயரை இந்த விருதுக்கு பரிந்துரைத்த மத்திய விளையாட்டுத் துறை அமைச்சருக்கும், அதற்கு ஆதரவு தந்த பிரதமருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் மேரி கோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com