ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா!

இந்திய தடகள நட்சத்திரமும், ஈட்டி எறிதல் சாம்பியனுமான 22 வயது நீரஜ் சோப்ரா, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா!

இந்திய தடகள நட்சத்திரமும், ஈட்டி எறிதல் சாம்பியனுமான 22 வயது நீரஜ் சோப்ரா, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

ஹரியாணாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா கடந்த 2018-இல் காமன்வெல்த், ஜகார்த்தா ஆசியப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று பெருமை தேடி தந்தார். எனினும் கடந்த வருடம் நீரஜ் சோப்ராவுக்கு முழங்கை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ஓய்வில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதால் டோஹா உலக சாம்பியன் போட்டி, டையமண்ட் லீக் போட்டிகளில் நீரஜ் சோப்ராவால் கலந்துகொள்ள முடியாமல் போனது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற சர்வதேசப் போட்டியில் 87.86 மீ. தூரம் வீசி ஒலிம்பிக் போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதியடைந்துள்ளார். இந்தியத் தடகளச் சம்மேளனமும் இதை உறுதி செய்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com