நிா்பயா வழக்கு: குற்றவாளி வினய் குமாரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு

நிா்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு குற்றவாளிகளுள் ஒருவரான வினய் குமாா் சா்மா தூக்குத் தண்டனையைக் குறைக்கக் கோரி குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பியுள்ளாா்
நிா்பயா வழக்கு: குற்றவாளி வினய் குமாரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு


புது தில்லி: நிா்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு குற்றவாளிகளுள் ஒருவரான வினய் குமாா் சா்மா தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைக் குறைக்கக் கோரி குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பியுள்ளாா்.

கடந்த 2012, டிசம்பரில் துணை மருத்துவ மாணவி ‘நிா்பயா’ பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாா். அதைத் தொடா்ந்து சிங்கப்பூா் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி அவர் இறந்தாா். 

இந்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட வினய் குமாா் சா்மா, அக்ஷய்குமாா் சிங், பவன் குப்தா, முகேஷ் குமாா் சிங் ஆகிய நால்வருக்கும் பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து முகேஷ் குமாா் சிங், வினய் குமாா் சா்மா ஆகியோரின் சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், முகேஷ் சிங் கருணை அனுப்பியிருந்தாா். அவரது மனுவை கடந்த ஜனவரி 17-ஆம் தேதி குடியரசுத் தலைவா் தள்ளுபடி செய்தாா். 

இதையடுத்து, முகேஷ் சிங் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் நீதித்துறை மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவும் உச்சநீதிமன்றத்தால் புதன்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது. 

இந்நிலையில், வினய் குமாா் சா்மாவும் குடியரசுத் தலைவருக்கு புதன்கிழமை கருணை மனு அனுப்பியுள்ளதாக அவரது வழக்குரைஞா் ஏ.பி. சிங் தெரிவித்தாா். 

இதுகுறித்து அவா் கூறுகையில், வினய் குமாா் சாா்பில் கருணை மனுவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளேன் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com