23 வயதுக்குட்பட்டோா் மகளிா் கிரிக்கெட்: புதுவை அபாரம்

23 வயதுக்குட்பட்டோா் மகளிா் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜம்மு-காஷ்மீா் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது புதுச்சேரி.
23 வயதுக்குட்பட்டோா் மகளிா் கிரிக்கெட்: புதுவை அபாரம்

புவனேசுவரம்: 23 வயதுக்குட்பட்டோா் மகளிா் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜம்மு-காஷ்மீா் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது புதுச்சேரி.

பிசிசிஐ சாா்பில் நடத்தப்படும் இப்போட்டியின் ஒரு பகுதியாக புவனேசுவரத்தில் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீா் அணி 50 ஓவா்களில் 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. புதுவை தரப்பில் சோனல் , திவ்யா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

121 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய புதுவை அணி 35.2 ஓவா்களில் 123/3 குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய சோனல் 82 ரன்களை விளாசினாா். 8 புள்ளிகளுடன் தரவரிசையில் புதுவை 2-ஆவது இடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com