பேட்டிங் அறிவுரை கூறியதற்காக பாகிஸ்தானிய வீரர் யூனுஸ் கான்  தன் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியதாக, அந்த அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ப்ளவர் தெரிவித்துள்ளார்.
பேட்டிங் அறிவுரை கூறியதற்காக பாகிஸ்தானிய வீரர் யூனுஸ் கான்  தன் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியதாக, அந்த அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ப்ளவர் தெரிவித்துள்ளார்.

பேட்டிங் அறிவுரை கூறியதற்காக என் கழுத்தில் கத்தி வைத்த பாகிஸ்தானிய வீரர் : முன்னாள் பயிற்சியாளர் தகவல்

பேட்டிங் அறிவுரை கூறியதற்காக பாகிஸ்தானிய வீரர் யூனுஸ் கான்  தன் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியதாக, அந்த அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ப்ளவர் தெரிவித்துள்ளார்.

புது தில்லி: பேட்டிங் அறிவுரை கூறியதற்காக பாகிஸ்தானிய வீரர் யூனுஸ் கான்  தன் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியதாக, அந்த அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ப்ளவர் தெரிவித்துள்ளார்.

ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் கிராண்ட் ப்ளவர். இவரும் இவரது மூத்த சகோதரரான ஆண்டி ப்ளவரும் அந்த நாட்டிற்காக சேர்ந்து விளையாடி சாதனைகள் படைத்துள்ளனர்.

தனது ஓய்விற்குப் பிறகு கிராண்ட் ப்ளவர் பேட்டிங் பயிற்சியாளராக பணியைத் துவங்கினார். கடந்த 014-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாட்டிற்குப் பிறகு பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் பேட்டிங் அறிவுரை கூறியதற்காக பாகிஸ்தானிய வீரர் யூனுஸ் கான்  தன் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியதாக, கிராண்ட் ப்ளவர் தெரிவித்துள்ளார்.

வியாழனன்று கிரிக்கெட் தொடர்பான உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் கூறியதாவது:

பாகிஸ்தான் அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது ஒரு சம்பவம் நடைபெற்றது. பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது, காலை உணவு சாப்பிடும் தருணத்தில் பாகிஸ்தானிய வீரர் யூனுஸ் கானுக்கு பேட்டிங் தொடர்பாக அறிவுரை கூறினேன். என்னை விட அவரது டெஸ்ட் போட்டி அனுபவம் அதிகம் என்று நினைத்தாரா என்று தெரியாது; நான் கூறிய அறிவுரையை அவர் நல்லவிதமாக எடுத்துக்கொள்ளவில்லை. எனது கழுத்தில் கத்தி வைத்து மிரட்டினார். அப்போது அங்கு இருந்த ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளரான மிக்கி ஆர்தர் தலையிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இவையெல்லாம் பயிற்சியாளர் வாழ்வில் நடக்ககூடிய ஒன்றுதான் அதன்பிறகு அங்கு பணிபுரிவது கசப்பான ஒரு அனுபவமாக மாறிவிட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com