இங்கிலாந்தில் பாகிஸ்தான் அணி: டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களுக்கான அட்டவணை வெளியீடு!

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் பாகிஸ்தான் அணி: டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களுக்கான அட்டவணை வெளியீடு!

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து - மே.இ. தீவுகள் ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை 8 முதல் தொடங்குகிறது. ஜூலை 28 அன்று டெஸ்ட் தொடர் முடிவடைகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்று டெஸ்டுகளும் காலி மைதானத்தில் நடைபெறும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதையடுத்து ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் 3 டெஸ்ட், 3 டி20 ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது. இதில் சொந்தக் காரணங்களால் தங்களால் கலந்துகொள்ள முடியவில்லை என வேகப்பந்துவீச்சாளர் முகமது அமிர், பேட்ஸ்மேன் ஹாரிஸ் சோஹைல் ஆகியோர் தெரிவித்துள்ளார்கள்.

இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கான பாகிஸ்தான் அணி ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட்டது. 29 பேர் கொண்ட இந்த அணியில் யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹைதர் அலி தேர்வானார். 

வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 10 வீரர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று முதலில் உறுதியானது. இதனால் கிரிக்கெட் உலகம் அதிர்ச்சியடைந்தது. இதனால் இங்கிலாந்து சென்ற பாகிஸ்தான் அணியில் அந்த 10 வீரர்களும் இடம்பெறவில்லை. இதற்குப் பதிலாக 5 மாற்று வீரர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். 10 வீரர்களில், ஆறு வீரர்களுக்கும் இருமுறை நெகடிவ் என முடிவு வந்ததால் அனைவரும் இங்கிலாந்துக்குச் சென்றுள்ளார்கள். இந்நிலையில் மீதமுள்ள 4 வீரர்களுக்கும் நடத்தப்பட்ட இரு கரோனா பரிசோதனைகளில் 3 வீரர்களுக்கு நெகடிவ் என முடிவு வந்துள்ளது. இதையடுத்து ஹைதர் அலி, இம்ரான் கான், கஷிஃப் பட்டி ஆகிய மூன்று வீரர்களும் இங்கிலாந்துக்குச் செல்லவுள்ளார்கள். ஹாரிஸ் ராஃப்-க்கும் மட்டும் துரதிர்ஷ்டவசமாக மீண்டும் பாசிடிவ் என முடிவு வந்துள்ளது. எனினும் அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லாததால் விரைவில் அவரும் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாட பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது. லாகூரிலிருந்து தனி விமானம் மூலமாக மான்செஸ்டருக்குச் சென்றுள்ளார்கள். இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆகிய அனைவரும் 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். 

இங்கிலாந்தில் பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது.

ஆகஸ்ட் 5 முதல் டெஸ்ட் தொடரும் ஆகஸ்ட் 28 முதல் டி20 தொடரும் தொடங்குகின்றன.

டெஸ்ட் தொடர்

ஆகஸ்ட் 5-9 - முதல் டெஸ்ட், ஓல்ட் டிரஃபோர்டு 

ஆகஸ்ட் 13-17 – 2-வது டெஸ்ட், ஏஜஸ் பெளல் 

ஆகஸ்ட் 21-25 – 3-வது டெஸ்ட், ஏஜஸ் பெளல்l

டி20 தொடர்

ஆகஸ்ட் 28 – முதல் டி20, ஓல்ட் டிரஃபோர்டு

ஆகஸ்ட் 30 – 2-வது டி20, ஓல்ட் டிரஃபோர்டு

செப்டம்பர் 1 – 3-வது டி20, ஓல்ட் டிரஃபோர்டு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com