முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற மே.இ. தீவுகள் அணி: 3-ம் நாள் ஆட்டத்தின் ஹைலைட்ஸ் விடியோ

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 318 ரன்கள் எடுத்ததன் மூலம் 114 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற மே.இ. தீவுகள் அணி: 3-ம் நாள் ஆட்டத்தின் ஹைலைட்ஸ் விடியோ

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 318 ரன்கள் எடுத்ததன் மூலம் 114 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

செளதாம்ப்டனில் இங்கிலாந்து - மே.இ. தீவுகள் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கடந்த புதன் அன்று தொடங்கியது. மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை 28 அன்று முடிவடைகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்று டெஸ்டுகளும் காலி மைதானத்தில் நடைபெறும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கரோனா அச்சுறுத்தலால் பல்வேறு கிரிக்கெட் தொடர்களும் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் 116 நாள்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் ஆட்டத்தைக் காணும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைத்துள்ளது.

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் மனைவி கேரி-க்கு 2-வது குழந்தை பிறந்துள்ளது. இதனால் முதல் டெஸ்டிலிருந்து ஜோ ரூட் விலகியுள்ளார். இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜாஸ் பட்லர் துணை கேப்டனாகச் செயல்படுகிறார்.

மழை காரணமாக முதல் நாளன்று 17.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணி, 1 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்தது.

2-ம் நாளன்று ஹோல்டரின் அசத்தலான பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஹோல்டர் 6 விக்கெட்டுகளும் கேப்ரியல் 4 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். பிறகு ஆடிய மே.இ. அணி 2-ம் நாளின் முடிவில் 19.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்தது. 

3-ம் நாளன்று மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 318 ரன்கள் எடுத்ததன் மூலம் 114 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 3-ம் நாளின் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 10 ஓவர்களில் 15 ரன்கள் எடுத்துள்ளது. 10 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் அந்த அணி 99 ரன்கள் பின்தங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com