4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி

இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
புகைப்படம்: டிவிட்டர் | ஐசிசி
புகைப்படம்: டிவிட்டர் | ஐசிசி


இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான சௌதாம்படனில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 318 ரன்கள் குவித்தது. 

114 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து 313 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றிக்கு 200 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தின் தேனீர் இடைவேளையின்போது 4 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்திருந்தது. பிளாக்வுட் 65 ரன்களுடனும், டௌரிச் 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கடைசி செஷனில் 57 ரன்கள் தேவை என்ற நிலையில், பிளாக்வுட்டும், டௌரிச்சும் ஆட்டத்தைத் தொடங்கினர். டௌரிச் கூடுதலாக 5 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் 20 ரன்களுக்கு ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, பிளாக்வுட்டுடன் கேப்டன் ஹோல்டர் இணைந்தார். தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிளாக்வுட் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 95 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இதன்பிறகு 64.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்ததையடுத்து, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மேற்கிந்தியத் தீவுகள். கேப்டன் ஹோல்டர் 14 ரன்களுடனும், கேம்பெல் 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக 117 நாள்கள் எவ்விதப் போட்டியும் நடைபெறாமலிருந்த நிலையில், நடைபெற்ற முதல் கிரிக்கெட் ஆட்டம் இதுவாகும். இதில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com