கவாஸ்கருடன் அற்புதமான கூட்டணி அமைத்த முன்னாள் வீரர் சேத்தன் செளகானுக்கு கரோனா தொற்று உறுதி!

இந்திய முன்னாள் வீரர் சேத்தன் செளகான், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கவாஸ்கருடன் அற்புதமான கூட்டணி அமைத்த முன்னாள் வீரர் சேத்தன் செளகானுக்கு கரோனா தொற்று உறுதி!

இந்திய முன்னாள் வீரர் சேத்தன் செளகான், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணிக்காக 40 டெஸ்டுகள், 7 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியவர் சேத்தன் செளகான். டெஸ்ட் கிரிக்கெட்டில் 2084 ரன்கள் எடுத்துள்ளார். மஹாராஷ்டிரம் மற்றும் தில்லி அணிகளுக்காக ரஞ்சி கோப்பைப் போட்டியில் விளையாடிய சேத்தன் செளகானுக்கு 1981-ல் அர்ஜூனா விருது கிடைத்துள்ளது. சுனில் கவாஸ்கரும் செளகானும் 59 இன்னிங்ஸில் தொடக்க வீரர்களாக விளையாடி 3000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்கள். இந்தக் கூட்டணி 10 முறை 100 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக் - கம்பீர் ஆகிய இருவர் மட்டுமே கவாஸ்கர் - செளகானை விடவும் அதிக முறை முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் கூட்டணி அமைத்துள்ளார்கள். செளகான், உத்தரப் பிரதேசத்தில் தற்போது மாநில அமைச்சராக உள்ளார்.

இந்நிலையில் 72 வயது சேத்தன் செளகானுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து லக்னெளவில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். செளகானின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தற்போது கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com