2-வது டெஸ்ட்: மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து 29/1

முதல் நாள் உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் எடுத்துள்ளது.
2-வது டெஸ்ட்: மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து 29/1

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது. முதல் நாள் உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. முதல் டெஸ்டில் வெற்றி பெற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 200 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 64.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து முதல் டெஸ்டில் வெற்றியடைந்தது. பிளாக்வுட் 95 ரன்கள் எடுத்தார். கேப்ரியல் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணி. 2-வது டெஸ்ட் மான்செஸ்டரில் இன்று தொடங்கியுள்ளது. 

மான்செஸ்டரில் இன்று காலை மழை பெய்ததால் டெஸ்ட் ஆட்டத்தின் டாஸ் நிகழ்வு தாமதமானது. டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பாதுகாப்பு விதிமுறைகளை மீறி வீட்டுக்குச் சென்ற ஆர்ச்சர், 2-வது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்டில் விளையாடாத ஜோ ரூட், இங்கிலாந்து அணிக்குத் தலைமை தாங்கியுள்ளார். இங்கிலாந்து அணியில் சாம் கரண், கிறிஸ் வோக்ஸ், பிராட் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். மே.இ. தீவுகள் அணியில் எந்தவொரு மாற்றமும் இல்லை.

பந்துவீச்சுக்குச் சாதகமான சூழலை மே.இ. தீவுகள் பந்துவீச்சாளர்கள் நன்குப் பயன்படுத்தி தொடக்க வீரர்களுக்கு நெருக்கடியை உண்டாக்கினார்கள். இதனால் நிதான முறையில் ரன்கள் எடுக்கப்பட்டன. உணவு இடைவேளை நெருங்கும் சமயத்தில் பர்ன்ஸ் விக்கெட்டை சேஸ் வீழ்த்தினார். 15 ரன்களில் பர்ன்ஸ் வெளியேறினார். 

முதல் நாள் உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 13.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com