தோனி நட்சத்திரமாக விளங்குவார் என 2004-லிலேயே கங்குலி கணித்தார்!

உங்களுக்குத் திறமை இருந்தால் அவர் உங்களை விட்டுக்கொடுக்க மாட்டார், ஊக்கமளிப்பார்.
தோனி நட்சத்திரமாக விளங்குவார் என 2004-லிலேயே கங்குலி கணித்தார்!

2004-லிலேயே தோனியின் வருங்காலத்தை செளரவ் கங்குலி கணித்தார் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் இயக்குநர் ஜோய் பட்டாசார்யா கூறியுள்ளார். 

ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

2004-ல் வங்கதேசத்துக்கு கங்குலியுடன் விமானத்தில் சென்றேன். அப்போது கங்குலி சொன்னார், அணியில் புதிய வீரர் ஒருவர் வந்துள்ளார். அவரை நீங்கள் பார்க்க வேண்டும். வருங்காலத்தில் நட்சத்திரமாக விளங்குவார் என்றார். கங்குலியின் சிறப்பம்சமே, ஒருவரைப் பார்த்தவுடன் அவருடைய திறமைகளைக் கண்டறிவார். உங்களுக்குத் திறமை இருந்தால் அவர் உங்களை விட்டுக்கொடுக்க மாட்டார், ஊக்கமளிப்பார். ரன்கள் எடுக்காவிட்டால் நீங்கள் தோற்றுவீட்டீர்கள் என்று அர்த்தமல்ல. இது அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. ஒருநாள் உங்கள் திறமை வெளிப்படும் என கங்குலி காத்திருப்பார் என்றார். 

2004-ல் வங்கதேசத்துக்கு எதிரான அறிமுகமானார் தோனி. முதல் ஆட்டத்தில் ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். எனினும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்குத் தேர்வானார். 5-வது ஒருநாள் ஆட்டத்தில் 123 பந்துகளில் 148 ரன்கள் எடுத்தார் தோனி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com