பாகிஸ்தான் அணிக்காக விளையாட முடியவில்லையே: பிரபல தென் ஆப்பிரிக்க வீரர் வருத்தம்

என் வாழ்க்கையில் பெரும்பாலான கிரிக்கெட் ஆட்டங்களை பாகிஸ்தானில் தான் விளையாடியுள்ளேன்...
பாகிஸ்தான் அணிக்காக விளையாட முடியவில்லையே: பிரபல தென் ஆப்பிரிக்க வீரர் வருத்தம்

பாகிஸ்தானில் பிறந்தும் அந்நாட்டு அணிக்காக விளையாட முடியாமல் போனதற்கு பிரபல தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் லாகூரில் பிறந்த இம்ரான் தாஹிர், 2005 வரை அங்கு வசித்தார். பாகிஸ்தான் ஏ, யு-19 அணிகளுக்காக விளையாடியுள்ளார். எனினும் பாகிஸ்தான் அணியில் விளையாட இடம் கிடைக்காததால் தென் ஆப்பிரிக்காவுக்கு இடம் பெயர்ந்தார். மனைவி சுமையா தில்தாரின் அறிவுரையின்படி 2005 முதல் தென் ஆப்பிரிக்காவில் வசிக்கிறார். நான்கு வருட காலம் அங்கு வசித்ததால் 2009 முதல் தென் ஆப்பிரிக்க அணிக்கு விளையாடும் தகுதியை அடைந்தார்.

ஒரு பேட்டியில் இம்ரான் தாஹிர் கூறியதாவது:

லாகூரில் கிரிக்கெட் விளையாடியுள்ளேன். அங்குதான் என் திறமைகளைக் கண்டறிந்தேன். என் வாழ்க்கையில் பெரும்பாலான கிரிக்கெட் ஆட்டங்களை பாகிஸ்தானில் தான் விளையாடியுள்ளேன். எனினும் பாகிஸ்தான் அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த வருத்தம் என்னிடம் உள்ளது.

பாகிஸ்தானை விட்டுச் செல்ல வேண்டும் என்பது கடினமான முடிவாக இருந்தது. ஆனால் கடவுள் என்னை ஆசிர்வதித்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணியில் விளையாடுவதற்கு முக்கியக் காரணம் என் மனைவி தான் என்றார்.

தென் ஆப்பிரிக்க அணிக்காக இதுவரை 107 ஒருநாள், 38 டி20, 20 டெஸ்டுகளில் இம்ரான் தாஹிர் விளையாடியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com