இங்கிலாந்து - மே.இ. தீவுகள்: 3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்!

இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் நாளை தொடங்குகிறது.
இங்கிலாந்து - மே.இ. தீவுகள்: 3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்!

இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் நாளை தொடங்குகிறது.

இந்த டெஸ்டை டிரா செய்தால் விஸ்டன் கோப்பையை மேற்கிந்தியத் தீவுகள் அணி தக்கவைத்துக் கொள்ளும்.

இங்கிலாந்து வெற்றி பெற்றால் தொடரை 2-1 என வென்றுவிடும். அயர்லாந்துடனான ஒரு டெஸ்ட் தொடரைத் தவிர்த்துப் பார்த்தால் கடந்த 5 டெஸ்ட் தொடர்களில் ஒன்றில் மட்டும் தான் இங்கிலாந்து அணி வென்றுள்ளது. அதனால் அந்த அணிக்கு இந்த வெற்றி மிக முக்கியமானதாக உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது மேற்கிந்தியத் தீவுகள் அணி. எனினும் 2-வது டெஸ்டை 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இங்கிலாந்து அணி. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அசத்திய பென் ஸ்டோக்ஸ், ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதனால் டெஸ்ட் தொடர் 1-1 சமனில் உள்ளது. 3-வது டெஸ்ட், மான்செஸ்டரில் நாளை நடைபெறவுள்ளது.

2-வது டெஸ்ட் ஆட்டத்துக்கான 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணி முதலில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் ஆர்ச்சர் இடம்பெற்றிருந்தார். ஆனால் பாதுகாப்பு விதிமுறைகளை அவர் மீறியதால் 2-வது டெஸ்டிலிருந்து நீக்கப்பட்டார். முதல் டெஸ்டில் நன்றாகப் பந்துவீசியதால் 2-வது டெஸ்டில் ஆர்ச்சர் நிச்சயம் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து பலமான அணியுடன் களமிறங்கவுள்ளது. ஆண்டர்சனும் ஆர்ச்சரும் நிச்சயம் விளையாடுவார்கள் எனத் தெரிகிறது. இதனால் ஸ்டூவர்ட் பிராட், வோக்ஸ், மார்ட் வுட், சாம் கரண் ஆகிய நால்வரில் ஒருவரை மட்டும் தேர்வு செய்ய வேண்டிய நிலைமையில் உள்ளது. பிராட் மீண்டும் வாய்ப்பைப் பெறுவார் என்று அறியப்படுகிறது. 

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் சில சிக்கல்கள் உள்ளன. ஷாய் ஹோப், கேம்பல் ஆகிய இருவரும் சரியாக விளையாடாததால் இருவருக்குப் பதிலாக வேறு வீரர்கள் களமிறங்குவார்கள் எனத் தெரிகிறது. இந்தத் தொடரில் ஹோப் 57 ரன்களும் கேம்பல் 52 ரன்களும் மட்டும் எடுத்துள்ளார்கள். 

கடைசி டெஸ்ட் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காகக் கடுமையாகப் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com