எட்டு உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடிய இலங்கை வீராங்கனை ஓய்வு

2009, 2013, 2017 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளிலும் 2009, 2010, 2012, 2014, 2018 டி20 உலகக் கோப்பைப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்...
எட்டு உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடிய இலங்கை வீராங்கனை ஓய்வு

எட்டு உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை கிரிக்கெட் வீராங்கனை ஸ்ரீபாலி வீரக்கொடி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

2006 முதல் இலங்கை அணிக்காக விளையாடி வந்த 34 வயது வீரக்கொடி, கடைசியாக 2018-ல் விளையாடினார்.

2009, 2013, 2017 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளிலும் 2009, 2010, 2012, 2014, 2018 டி20 உலகக் கோப்பைப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார் வீரக்கொடி. 2014 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை அணி வெண்கலம் வென்றபோது அந்த அணியில் இடம்பெற்றிருந்தார்.

இலங்கை அணிக்காக 89 ஒருநாள், 58 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஓய்வுக்குப் பிறகு, ஃபிட்னஸ் பயிற்சியாளராகப் பணியாற்றவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com